Published:Updated:

“எளிமையாக இருந்தால்தான் அரசியல் செய்ய முடியுமா?”

கமீலா நாசர்
பிரீமியம் ஸ்டோரி
கமீலா நாசர்

- கமீலா நாசர் காட்டம்

“எளிமையாக இருந்தால்தான் அரசியல் செய்ய முடியுமா?”

- கமீலா நாசர் காட்டம்

Published:Updated:
கமீலா நாசர்
பிரீமியம் ஸ்டோரி
கமீலா நாசர்
‘பிக் பாஸ் ஷூட்டிங் பாதி; அரசியல் மீதி’ என சுற்றிச் சுழல்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். ‘எம்.ஜி.ஆர் ஆட்சி’, ‘லஞ்சப் பட்டியல் வெளியீடு’, ‘கூட்டணிப் பேச்சுவார்த்தை’ என இரு பெரும் கட்சிகளுக்கும் சவாலாக மாறிவருகிறது ம.நீ.ம. இந்தநிலையில் கட்சியின் மாநிலச் செயலாளர் (சென்னை மண்டலம்) கமீலா நாசரிடம் நடப்பு அரசியல் குறித்துப் பேசினோம்...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘ரஜினியின் அரசியல் விலகல், ‘அரசியலிலும் ரஜினியை வெல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்து கமலை விடுவித்திருக்கிறது’ என்று எடுத்துக்கொள்ளலாமா?’’

‘‘அப்படிச் சொல்ல முடியாது. திரைத்துறையில் இருவருமே முன்னணி நடிகர்கள் என்றாலும், நல்ல நண்பர்கள். ஆனால், அரசியலைப் பொறுத்தவரையில், மக்களைச் சென்றடைய வேண்டுமென்றால், யாராவது ஒருவருடன் மோதித்தான் ஆக வேண்டும். அரசியலைவிட்டு ரஜினி விலகியும் போய்விட்ட சூழலில், இந்தக் கேள்வியே தேவையற்றது!’’

‘‘அரசுத்துறைகளில் நடைபெறும் அடித்தட்டு லஞ்சங்களைப் பற்றிக் கவலைப்படுகிற ம.நீ.ம., அரசின் மிகப்பெரிய ஊழல்களைக் கேள்வி கேட்கத் தயங்குவது ஏன்?’’

‘‘வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிற மக்கள்தான் இங்கே அதிகம். சாதிச் சான்றிதழ் வாங்குவதில் ஆரம்பித்து மருத்துவச் சிகிச்சை வரை அவர்கள் அன்றாடம் பாதிக்கப்படுகிறார்கள். அந்தப் பிரச்னைகளைத்தான் இப்போது எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அரசுத் துறைகளில் நடைபெற்றுவரும் கோடானுகோடி ஊழல்களைப் பற்றி நேரடியாக அறிந்திராத மக்களிடம், இனிமேல்தான் பிரசார வடிவில் அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்ப்போம். `அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்’ என்று கமல்ஹாசனே கூறியிருக்கிறாரே...’’

கமீலா நாசர்
கமீலா நாசர்

‘‘அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடும் கமல்ஹாசன், தனது சொத்துக்கணக்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?’ என்று சவால் விட்டிருக்கிறாரே..?’’

‘‘கண்டிப்பாக தனது சொத்துக்கணக்கை கமல்ஹாசன் வெளியிடுவார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கெனவே கமல் அறிவித்துவிட்டார். ஆக, தேர்தலின்போது அவரது சொத்துக்கணக்கைக் காட்டித்தானே ஆக வேண்டும்!’’

‘‘எம்ஜிஆர் நம்பியும், ‘நேர்மையை வலியுறுத்துகிற கமல்ஹாசன், ஆர்.பி.எஃப் நிதி நிறுவனத்தில் வாங்கியிருந்த 16 கோடி ரூபாய்க் கடனைத் திருப்பி செலுத்தினாரா...’ என்று சந்தேகம் எழுப்பியிருக்கிறாரே?’’

‘‘ஆர்.பி.எஃப் நிதி நிறுவனத்தில் கமல் கடன் வாங்கியிருந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த நிதி நிறுவனம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது, கடன் பெற்றவர்களிடமிருந்து பணம் வசூலும் செய்யப்பட்டது. எனவே, வாங்கிய கடனை செலுத்தாமல் யாரும் இருக்க முடியாது. என் தந்தையும் அந்த நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்திருந்தார். அவருக்கு மாதந்தோறும் தங்கு தடையின்றி ரிட்டர்ன் கிடைத்துவந்தது. ஏற்கெனவே கடன் பெற்றவர்கள் முறையாகப் பணம் செலுத்தியிருந்தால்தானே இதெல்லாம் சாத்தியம்!’’

‘‘அரசியலில், நேர்மை-எளிமை பற்றிப் பேசுகிற கமல்ஹாசன், ‘சொகுசு கார், ஹெலிகாப்டர் பயணம், ஸ்டார் ஹோட்டலில் அறை’ என்று ஆடம்பரமாக வலம்வருகிறாரே?’’

‘‘எளிமையாக இருந்தால்தான் அரசியல் செய்ய முடியுமா? நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, ஒரு தலைவர் தனது சொந்தக் காசில் ஹெலிகாப்டரில் பயணம் செல்வதென்பது எப்படி ஆடம்பரமாகும்? திருச்சி விமான நிலையத்தில், ம.நீ.ம தொண்டர்களும் மக்களும் கமல்ஹாசனுக்கு வரவேற்பு கொடுக்கக் காத்திருக்கிறார்கள். ஆனால், விமான நிலையத்தில் வந்து இறங்குவதற்கு கமல்ஹாசனுக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஆனாலும், குறித்த நேரத்தில் மக்களைச் சந்தித்தாக வேண்டும் என்ற ஆவலோடு தனது சொந்தச் செலவில், ஹெலிகாப்டரில் பயணம் செய்து திருச்சி வந்து சேர்ந்தார் கமல். இது எப்படித் தவறாகும்?’’

‘‘ஊழல் ஒழிப்பை மட்டுமே முன்னிறுத்துதல், துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு என ம.நீ.மய்யத்தின் சில செயல்பாடுகள், ‘பா.ஜ.க-வின் பி டீம்’ என்ற தோற்றத்தை தருகிறதுதானே?’’

‘‘சமூகநீதியை முன்னிறுத்துகிற திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், நம் மாநிலம் இன்னும் நிறைய முன்னேற்றங்களை அடைந்திருக்க வேண்டும். ஆனால், மாறி மாறி இவர்கள் செய்த ஊழலால், எட்ட வேண்டிய உயரத்தை இன்னும் நாம் எட்டவில்லை. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு எதிராக இங்குள்ள மாநில அரசு, கமிட்டி அமைத்து அரசியல் செய்தது. இந்தச் சூழலில், ‘நேர்மையான ஒருவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்’ என்ற வகையிலேயே கமலும் ஆதரவு தெரிவித்தார். இதுதான் உண்மை!’’

‘‘சினிமாவில் சிவாஜியைத் தூக்கிப்பிடித்த கமல்ஹாசன், அரசியலில் சிவாஜியைத் தூக்கிப்போட்டுவிட்டு, எம்.ஜி.ஆரைப் புகழ்வது சந்தர்ப்பவாதம்தானே?’’

‘‘சிவாஜி கணேசனை எப்போதுமே தன் அப்பா ஸ்தானத்தில் வைத்திருப்பவர் கமல்ஹாசன். அதனால், அவரை இப்போது தூக்கிப் போட்டுவிட்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. இன்றைக்கு ஆளுங்கட்சியினராக இருக்கிற அ.தி.மு.க தலைவர்களுக்கு, அந்தக் கட்சியின் தலைவரான எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து கிராமசபைக் கூட்டங்கள் வரை அனைத்தையுமே கமல்ஹாசன்தான் தூசுதட்டி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. இதுநாள் வரையிலும் அ.தி.மு.க-வினரே மறந்துபோய்விட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை, வருகிற பொங்கல் பரிசுப் பைகளில் கட்டாயம் அச்சிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!’’