Published:Updated:

`புதிய கட்டமைப்பு; 1 லட்சம் நிர்வாகிகள்!’ - மக்கள் நீதி மய்யத்துக்கு `ஐபேக்' அட்வைஸ்

கலிலுல்லா.ச

`தனித்தனியாக வாக்காளர்களை நெருங்கும்யுக்தி; தி.மு.க-வுக்கு டார்கெட்’ என்ற கோணத்தில் மக்கள் நீதி மய்யத்தில் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார் பிரசாந்த் கிஷோர்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பரபரப்பாக இருப்பதால், தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருக்கிறார் இருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் என்ற பேச்சு வலம் வந்துகொண்டிருக்கிறது. அதேநேரம், மக்கள் நீதி மய்யத்துக்காகத் `தேர்தல் வித்தகர்' பிரஷாந்த் கிஷோரின் டீம் ஒன்று கமல்ஹாசனுக்காகக் களம் இறங்கியுள்ளது. பி.கே டீம் கொடுத்த ஆலோசனையின்படி கட்சியில் பல்வேறு புதிய மாற்றங்களைச் செயல்படுத்தவும் மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது. மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்கு விவரங்களை வார்டு வாரியாகக் கேட்டுப் பெற்றுள்ளது பி.கே நடத்தி வரும் ஐபேக் நிறுவனம்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இதில், கட்சி மட்டுமல்லாமல் கமல் நற்பணி இயக்கங்கள் தொடர்பாக ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது. இதில்`கிராம அளவில் நற்பணி மன்றங்களின் செயல்பாடு ஆரம்பகாலத்திலிருந்தே தொய்வாகத்தான் இருந்திருக்கிறது’ என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கிராமப்புறங்களில் பகுதி, தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் பெயரளவில்தான் செயல்படுகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லாததே கிராமப்புறங்களில் வாக்குவங்கியை இழந்ததற்குக் காரணம் என்ற அறிக்கையும் ஐபேக் நிறுவனத்துக்குச் சென்றுள்ளது.

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் பேசினோம். ``எங்கள் கட்சியின் நிர்வாக்குழு கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கலந்துகொண்டார். ஐபேக் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், வெற்றி பெறக்கூடிய ஏதாவது ஒரு கட்சிக்காகத்தான் தேர்தல் வேலை பார்ப்பார்கள். ஆனால், முதன்முறையாக வளர்ந்து வரும் ஒரு கட்சிக்காகப் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். எங்கள் வளர்ச்சிக்கு இன்னும் 40 சதவீதம் ஓட்டு தேவைப்படுகிறது என்பதால், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறார். கமல்ஹாசனைப் பொறுத்தவரையில், வெற்றிபெறுவதற்கான சின்ன வாய்ப்பைக்கூட விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

கமலுடன் சீமான்
கமலுடன் சீமான்

சீமானின் நாம் தமிழர் கட்சி எல்லா இடத்திலும் சரிசமமாக 3 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் ஓரிடத்தில் 12 சதவிகிதமும் மற்ற இடத்தில் 1 சதவிகிதமும் வாங்கிருக்கிறோம். இப்படியொரு ஏற்றத்தாழ்வுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். கட்டமைப்பில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. கட்சி செயல்பாடுகளில் மாற்றம் வேண்டுமென்பதால், பிரஷாந்த் கிஷோரின் அனுபவங்களை நாங்கள் பயன்படுத்த நினைக்கிறோம். அவர்களும் இதை ஒரு சவாலாக எடுத்துச் செய்கிறார்கள். பெரிய கட்சிகளெல்லாம் இருக்கும்போது, அவர் எங்களுக்காகச் செயல்படுகிறார் செய்கிறார் என்பதில் மகிழ்ச்சி. இடையில் உள்ளாட்சித்தேர்தல் வந்தாலும் அதையும் சந்திக்கத் தயாராகத்தான் இருக்கிறோம்" என விவரித்தவர்கள்,

``வேலூர் தேர்தலைப் புறக்கணிப்பால் எங்களுக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் எங்கள் இருப்பைப் பதிவு செய்வோம். அடுத்தகட்டத்துக்குச் செல்வதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறோம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்
``கமல்ஹாசன் கேட்ட கேள்விகள்!” - வேலூர் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் விலகியது ஏன்?

அடுத்து வரக்கூடிய நாள்களில் 1 லட்சம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். திண்ணைப் பிரசாரம் உட்பட கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான வேலைகளும் தொடங்க இருக்கின்றன. மாவட்ட அமைப்பில் 40 பேர் ஒரு டீமாகச் செயல்படுவார்கள். ஒவ்வொரு வாக்காளரையும் நெருங்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன" என்கின்றனர்.

சரியாக ரெண்டு வாரம் முன்பு, கழுகார் நம் அலுவலகத்துக்கு வந்தபோது எடப்பாடி டீமுக்கும், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் டீமுக்கும் இருந்த டீலிங் பற்றி சொல்லியிருந்தார். மக்கள் நீதி மய்யத்துக்காகத்தான் மெயினாக ஐ-பேக் வேலை செய்கிறது என்றாலும், எடப்பாடி டீமுக்கும் ஐடியாக்களை கொடுத்துள்ளார்களாம்!

`புதிய கட்டமைப்பு; 1 லட்சம் நிர்வாகிகள்!’ - மக்கள் நீதி மய்யத்துக்கு `ஐபேக்' அட்வைஸ்

இப்போது மெய்யாக ஐ-பேக் டீம் யாருக்குத்தான் வேலை செய்கிறது? கழுகார் அன்று கொடுத்த ரிப்போர்ட்டை இன்று உங்கள் APPAPPO ஆப் ஹோம்-பேஜில் எடுத்து வைத்திருக்கிறோம்.

இன்ஸ்டால் செய்து படிக்க -> http://bit.ly/EngumIPACMaiam