Published:Updated:

``போஸ் கொடுத்தால் போதுமா.. கதறும் நாடோடியின பெண்ணுக்குக் கடன் கொடுக்க மாட்டீர்களா?” - ம.நீ.ம கேள்வி

ஸ்டாலின் - அஸ்வினி

``நாடோடியின பெண் அஸ்வினிக்கு கடனுதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மநீம சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

``போஸ் கொடுத்தால் போதுமா.. கதறும் நாடோடியின பெண்ணுக்குக் கடன் கொடுக்க மாட்டீர்களா?” - ம.நீ.ம கேள்வி

``நாடோடியின பெண் அஸ்வினிக்கு கடனுதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மநீம சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Published:Updated:
ஸ்டாலின் - அஸ்வினி

``முதலமைச்சர் தனது கையால் ஒரு லட்சம் ரூபாய் லோனுக்கான காசோலை கொடுத்தார். ஆனால் அது இன்னும் கிடைக்கவில்லை. வீடு கட்டித் தருவதாக கூறினார்கள். அதுவும் இன்னும் கட்டித் தரவில்லை. கடை பற்றி கேட்டால் கேவலமாக பேசுகிறார்கள்” என நாடோடி சமூக பெண் அஸ்வினி ஒரு வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த நாடோடி சமூக பெண் அஸ்வினி கடந்த ஆண்டு கோயிலில் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து, முதல்வரே நேரில் சந்தித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால், அவர்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மேடையில் கடனுதவி கொடுப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். ஆனால், கடை இல்லை என்று கூறி, இதுவரை வங்கிக் கடன் தர மறுக்கிறார்கள் என்று அஸ்வினியும், மற்ற நாடோடி சமூக மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களிடம் முறையிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நாடோடி சமூக மக்களுக்கு கடனுதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது'' என தெரிவித்திருக்கிறார்.