Published:Updated:

``ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளைக் கடிக்க முனையும் அண்ணாமலை!” - கண்டித்த ம.நீ.ம

மக்கள் நீதி மய்யம்

``அண்ணாமலை ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பதுபோல் இப்போது நம்மவரைக் கடித்துக் குதற முனைந்திருக்கிறார்.'' - மநீம மாநில செயலாளர் முரளி அப்பாஸ்.

``ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளைக் கடிக்க முனையும் அண்ணாமலை!” - கண்டித்த ம.நீ.ம

``அண்ணாமலை ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பதுபோல் இப்போது நம்மவரைக் கடித்துக் குதற முனைந்திருக்கிறார்.'' - மநீம மாநில செயலாளர் முரளி அப்பாஸ்.

Published:Updated:
மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர், ``தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, வழக்கமாகப் பேசும் பொறுப்பற்ற பேச்சுகளில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிஃபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றைக் காண நேர்ந்தது. வழக்கமான குப்பைகளில் ஒன்று என்று ஒதுக்கித் தள்ளலாமென்று பார்த்தால் அவர் பேசியது நம்மவரைப் பற்றி.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பதுபோல் இப்போது நம்மவரைக் கடித்துக் குதற முனைந்திருக்கிறார். நம்மவர் தன் தொழில் சார்ந்த சில விஷயங்களைப் படிக்க லாஸ் ஏஞ்சல் வந்திருந்ததை, ஓய்வெடுக்க வந்ததாகப் புறம் கூறியும், வந்த இடத்தில் கட்சிக்காரர்களைச் சந்தித்ததைக் கேலி செய்தும் பேசியிருக்கிறார்.

பாஜக அண்ணாமலை
பாஜக அண்ணாமலை

நம்மவரின் லாஸ் ஏஞ்சல் பயணத்தைப் பற்றி இவர் கலிஃபோர்னியாவிலிருந்து பேசுகிறார். கலிஃபோர்னியா எங்கே இருக்கிறது... நாமக்கல்லுக்கும் கரூருக்கும் இடையிலா இருக்கிறது... அதே அமெரிக்காவில் போய் அரசியல் பேசும் இவர் நம்மவரைக் கேலி செய்கிறார். தன் சம்பாத்தியத்துக்கு ஒரு தொழிலை வைத்துக்கொண்டு மக்களுக்காகப் பாடுபடும் நம்மவரை, அரசியலில் சம்பாதிப்பவர்கள் கேலி பேசுவது புதிதல்ல. எனவே, அதற்கு நாம் பதில் சொல்லவேண்டியதில்லை. ஆனால், `பொன்னியின் செல்வன்’ திரைப்படக் காட்சி ஒன்றின் நேர்காணலில் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நம்மவர் ஒரு வரலாற்று உண்மையைக் கூறினார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதுவும் காஞ்சிப்பெரியவர் சொன்ன உண்மையை, திரு.சோ அவர்கள் ஒத்துக்கொண்ட உண்மையை, அண்மையில், இவரது கட்சியிலிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி வழிமொழிந்த உண்மையைத்தான் என் தலைவர் கூறினார். அதையெல்லாம் மறுக்க திராணியற்ற அண்ணாமலை, எங்கள் தலைவர்மீது பாய்கிறார். இப்படி அர்த்தமற்ற பேச்சைத் தொடர்ந்து பேசுவாரானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து, அவர் ஏற்கெனவே சொன்னபடி, ஆடுமேய்க்கும் தொழிலுக்குத்தான் போக வேண்டும். ஒரு நேர்மையான அரசியலைக் கொண்டுவர முயலும் நம்மவரைக் குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை உணர்ந்து, இனியாவது முன்னாள் காவலதிகாரி என்ற கௌரவத்துக்கு பங்கம் வராமல் பேசும்படி கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.