Published:Updated:

கோவை கார் வெடிப்பு: `முழுச் சதியையும் வெளியே கொண்டு வந்து மக்களின் அச்சத்தைப் போக்குக!' - ம.நீ.ம

மக்கள் நீதி மய்யம்

`கோவை கார் சிலிண்டர் வெடிப்புக்குப் பின்னாலுள்ள முழுச் சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்’ என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

கோவை கார் வெடிப்பு: `முழுச் சதியையும் வெளியே கொண்டு வந்து மக்களின் அச்சத்தைப் போக்குக!' - ம.நீ.ம

`கோவை கார் சிலிண்டர் வெடிப்புக்குப் பின்னாலுள்ள முழுச் சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்’ என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Published:Updated:
மக்கள் நீதி மய்யம்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தச் சம்பவம் குறித்துப் பேசிவருகின்றனர்.

அந்த வகையில், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் தங்கவேலு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ``கோவை கார் சிலிண்டர் வெடிப்புக்குப் பின்னாலுள்ள முழு சதியையும் வெளிக்கொணர்ந்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிவருவது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பலியானவரின் பின்னணியும், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் குறித்த தகவல்களும் பீதியூட்டும் வகையில் இருக்கின்றன.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

இதில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடுகளும், ஐந்து பேரைக் கைதுசெய்திருப்பதும் பாராட்டுக்குரியவை. அதேசமயம், முழுச் சதியையும் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னணியில் வெளிநாட்டுத் தீவிரவாத கும்பல் இருக்கிறதா என்றும் தீர விசாரிக்க வேண்டும்.

1998-ல் தொடர் குண்டுவெடிப்பால் நிலைகுலைந்த கோவை, அதிலிருந்து மீண்டுவர பல ஆண்டுகளாகின. அமைதியையும், தொழில் நகரின் வளர்ச்சியையும் குலைக்க முயல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.