Published:Updated:

மேற்கு வங்கம்: கைதான பார்த்தா சாட்டர்ஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் - மம்தா நடவடிக்கை

மம்தா பானர்ஜி

ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜி மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

மேற்கு வங்கம்: கைதான பார்த்தா சாட்டர்ஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் - மம்தா நடவடிக்கை

ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜி மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 23-ம் தேதி கைதுசெய்தனர்.

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் குணால் கோஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ``அமைச்சர் மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக நீக்க வேண்டும்'' என பதிவிட்டுவிட்டு, பின்னர் சிறிது நேரத்தில் அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார்.

பார்த்தா சாட்டர்ஜி
பார்த்தா சாட்டர்ஜி

அதைத் தொடர்ந்து மேற்கு வங்க அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பார்த்தா சாட்டர்ஜியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கப்படுவதாக மேற்கு வங்க அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அதில், ``தொழில், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை, பொது நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை புனரமைப்புத்துறை ஆகிய துறைகளிலிருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கப்படுகிறார்'' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.