Published:Updated:

`என்னை விமர்சிப்பவர்களைவிட எனக்கு அதிகம் தெரியும்!’ - துர்கா பூஜை வரிவிதிப்பால் கொதித்த மம்தா

சத்யா கோபாலன்

‘எங்களுக்கு பாடம் எடுப்பதைவிட, மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பாருங்கள் ‘ என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி ( Twitter/@MamataOfficial )

வட இந்தியாவில் நடக்கும் துர்கா பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதிலும் மேற்குவங்க மாநிலத்தில், இந்த பூஜைகளை அரசே வெகு சிறப்பாக நடத்தும். இப்படியிருக்க, துர்கா பூஜைக்கு ஏற்பாடுசெய்யும் கமிட்டிகளுக்கு வரிவிதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. மத்திய அரசின் இந்த செயலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
Twitter/@MamataOfficial

இதுபற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டில் நடக்கும் அனைத்து விழாக்களாலும் நாங்கள் பெருமைப்படுகிறோம். விழாவைக் கொண்டாட வரி விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விழாவை ஏற்பாடு செய்பவர்களுக்கு இது பெரும் சுமையாக இருக்கும். துர்கா பூஜைகள் கொண்டாடுபவர்களுக்கு என் அரசு வரி விலக்கு செய்துள்ளது. துர்கா பூஜைக்கு ஏற்பாடுசெய்பவர்களுடன் இணைந்து வரிவிதிப்புக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தவுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியபடி, வரி விதிப்புக்கு எதிராக நேற்று கொல்கத்தாவில் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையில், நேற்று அம்மாநிலத்தில் நடந்த ஒரு அருங்காட்சியகம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அதில், “ என் மதத்தை நிரூபித்துவிட்டு தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்பதைவிட, நான் சாவதே மேல். உங்களிடம் என் மதத்தை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னை விமர்சிப்பவர்களைவிட அதிகமான சம்ஸ்கிருதம் எனக்குத் தெரியும்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
`உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவான எதிரி!' - நேர்கோட்டில் இணையும் மம்தா - சோனியா?

நான் ஒரு இந்து. ஆனால், அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். மதத்தைவைத்து மக்கள் பிரிக்கப்படுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மேற்கு வங்கத்தில் முன்னதாக ஆட்சி செய்தவர்களை விட, எங்கள் ஆட்சியில் அதிகமான துர்கா பூஜைகள் நடந்துள்ளன. நான் அவர்களுக்கு சவால்விடுகிறேன். நான் ஆட்சிக்கு வந்த இந்த எட்டு வருடத்தில், நாங்கள் செய்த மதம் தொடர்பான வேலைகளையும், முன்னதாக ஆட்சியிலிருந்தவர்கள் செய்த மத வேலைகளையும் ஒப்பிட்டுப்பாருங்கள். நாங்கள் மனித நேயத்தில் அதிக நம்பிக்கைக்கொண்டவர்கள். மதம் என்றால் மனிதநேயம். அது, நமக்கு அன்பை வெளிப்படுத்த கற்றுக் கொடுக்கிறது. பிறரை மதிக்கக் கற்றுக்கொடுக்கிறது. மதம் ஒருபோதும் மக்களைப் பிளவுபடுத்த கற்றுக்கொடுக்கவில்லை” என்று பேசியுள்ளார்.