Published:Updated:

``பாஜக-வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டிய நேரமிது!" - எதிர்க்கட்சிகளுக்கு மம்தா கடிதம்

மம்தா பானர்ஜி

`எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க-வின் நோக்கத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும்.' - மம்தா பானர்ஜி

``பாஜக-வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டிய நேரமிது!" - எதிர்க்கட்சிகளுக்கு மம்தா கடிதம்

`எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க-வின் நோக்கத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும்.' - மம்தா பானர்ஜி

Published:Updated:
மம்தா பானர்ஜி

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க அல்லாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``பா.ஜ.க நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பைத் தொடர்ந்து பலமுறை தாக்கிவருகிறது. இப்போது இந்த அடக்குமுறை ஆட்சியை நாம் ஒற்றுமையாக எதிர்த்துப் போராடவேண்டிய நேரம் இது. அமலாக்க இயக்குநரகம் சி.பி.ஐ மற்றும் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் உள்ளிட்ட மத்திய அமைப்புகளைத் தவறாக பா.ஜ.க பயன்படுத்துகிறது.

மோடி, அமித் ஷா பாஜக தலைவர்கள்
மோடி, அமித் ஷா பாஜக தலைவர்கள்

எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் இந்த மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க-வின் நோக்கத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும். தேர்தல் நெருங்கும்போது மத்திய அமைப்புகள் நடவடிக்கை எடுக்கத் துடிக்கின்றன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இவற்றுக்கு மிக லகுவாக அனுமதி வழங்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த பா.ஜ.க-வின் அடக்குமுறையை ஒழிக்க வேண்டும். எனவே, அனைவரும் இது குறித்து ஆலோசிக்க ஒரு கூட்டத்துக்கு ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism