Published:Updated:

``பொரிக்கு ஜிஎஸ்டி வந்துவிட்டதால், பாஜக-வினர் சாப்பிடாமல் இருக்கப் போகிறார்களா?!" - மம்தா தாக்கு

மம்தா பானர்ஜி

`பொரிக்கு ஜி.எஸ்.டி வந்துவிட்டது என்பதால் பா.ஜ.க-வினர் இனி சாப்பிடாமல் இருக்கப் போகிறார்களா? இனிப்புகள், லஸ்சி, தயிர்மீதும் கூட ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் என்னதான் சாப்பிடுவார்கள்?' - மம்தா

கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``2024-ல் பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்திய ராணுவத்தை அவமதிக்காதீர்கள். அக்னிபத் என்றால் என்ன? நமது நாட்டு இளைஞர்கள் பா.ஜ.க கட்சிக்காரராக செயல்படுவார்களா? எங்கள் தேசத்தின் இளைஞர்கள்மீது உங்களுக்கு மரியாதை இல்லையா? நாட்டின் மற்ற பகுதிகளைப் போல அல்லாமல், வங்காளத்தில் வறுமையும், வேலையின்மையும் குறைந்திருக்கிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பா.ஜ.க ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் அரசை தகர்க்க முயற்சி செய்கிறது. இது அவர்களுடைய வேலையாகவே போய்விட்டது. மேற்கு வங்கத்திலும் அவர்கள் நம்மை தோற்கடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் வெற்றி பெற இயலவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

பொரிக்கு ஜி.எஸ்.டி வந்துவிட்டது என்பதால் பா.ஜ.க-வினர் இனி சாப்பிடாமல் இருக்கப் போகிறார்களா? இனிப்புகள், லஸ்சி, தயிர்மீதும் கூட ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் என்னதான் சாப்பிடுவார்கள்? நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் கூட ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது'' என்றார்.