Published:Updated:

2024-ல் பீகார் மாடலுடன் மோடி அரசை வீழ்த்த திட்டமா?! - நிதிஷின் முன்னெடுப்பை சிலாகித்த மம்தா பானர்ஜி

மம்தா, நிதிஷ் குமார்

``ஒருபக்கம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், மறுபக்கம் தனித்துவிடப்பட்ட பாஜக என்ற நிலை உருவாக்கப்படும்.” - மம்தா பானர்ஜி

2024-ல் பீகார் மாடலுடன் மோடி அரசை வீழ்த்த திட்டமா?! - நிதிஷின் முன்னெடுப்பை சிலாகித்த மம்தா பானர்ஜி

``ஒருபக்கம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், மறுபக்கம் தனித்துவிடப்பட்ட பாஜக என்ற நிலை உருவாக்கப்படும்.” - மம்தா பானர்ஜி

Published:Updated:
மம்தா, நிதிஷ் குமார்

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, ``வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதற்கான ஆட்டம் மேற்கு வங்கத்தில் இருந்து தொடங்கும். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளன. ஒருபக்கம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், மறுபக்கம் தனித்துவிடப்பட்ட பாஜக என்ற நிலை உருவாக்கப்படும். அத்தகைய சூழலில் பாஜகவால் எவ்வாறு வெற்றி பெற்று அரசு அமைக்க முடியும்?” என்று அவர் பேசியது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹரியானாவில் ஒரே மேடையில் நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தோன்ற உள்ளனர். செப்டம்பர் 25-ல் திட்டமிடப்படும் இக்கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சி எடுக்கப்படுவதாக தெரிகிறது.

மம்தா, அகிலேஷ்
மம்தா, அகிலேஷ்

நாட்டின் முன்னாள் துணை பிரதமராக இருந்தவர் தேவிலால். ஹரியானாவை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரான இவரின் பிறந்த தினம் செப்டம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஹரியானாவின் ஹிசாரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், எதிர்க்கட்சி தலைவர்களான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) நிதிஷ்குமார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர்கள் அனைவரும் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாதவர்கள் என்பதால், இக்கூட்டத்தை வைத்து மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சி நடைபெறும் என எதிர்நோக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சிரோமணி அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல், சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத்பவார் ஆகியோரும் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்திய தேசிய லோக் தளம் (ஐ.என்.எல்.டி) தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நடத்திய சந்திப்பை அடுத்து இக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டமாக இது இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மம்தா, நிதிஷ் குமார்
மம்தா, நிதிஷ் குமார்

ஹரியானாவில் 2 முறை முதல்வராக இருந்தவர் லோக் தளம் கட்சியின் நிறுவனரான தேவிலால். இவரின் காலத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைத்து ஆட்சியும் செய்திருந்தது. கடந்த 1989 முதல் 1991 வரையில் மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் பிரதமராக வி.பி. சிங் மற்றும் சந்திரசேகர் இருந்தபோது, நாட்டின் ஆறாவது துணை பிரதமராக பதவி வகித்தவர் தேவி லால். இதனால் அவரின் பிறந்த நாளில், மீண்டும் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க முயல்கிறார் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா என்றகிற வாதம் இந்திய அரசியலை உற்று நோக்குபவர்களிடம் எழுந்துள்ளது.

இக்கூட்டத்துக்கு ஹரியானாவின் முன்னாள் முதல்வரான ஓம் பிரகாஷ் சவுதாலா, தென் மாநிலங்களின் கட்சிகளையும் அழைக்க உள்ளார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவரும் தெலங்கானாவின் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த அழைப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனராம்.

ஓம் பிரகாஷ் சவுதாலா
ஓம் பிரகாஷ் சவுதாலா

இதற்கிடையே பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதை அடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் டெல்லியில் முகாமிட்டு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் பல தலைவர்கள் காங்கிரஸை தம்முடன் சேர்ப்பதை விரும்பவில்லை எனத் தெரிந்துள்ளது. எனவே, மூன்றாவது அணி அமைத்து 2024 மக்களவை தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்கும் சூழலை பொறுத்து காங்கிரஸின் ஆதரவை பெறுவது என திட்டமிடப்படுகிறதாம்.