Published:Updated:

கேரளா: பிரதமர் மோடி நோக்கி வந்த பொருள்; விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரி | வீடியோ

பிரதமர் மோடி

நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோவை தொடங்கி வைப்பதற்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கேரளா சென்றிருந்தார்.

Published:Updated:

கேரளா: பிரதமர் மோடி நோக்கி வந்த பொருள்; விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரி | வீடியோ

நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோவை தொடங்கி வைப்பதற்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கேரளா சென்றிருந்தார்.

பிரதமர் மோடி

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருந்த மோடிக்கு ஏற்கெனவே ஒருவர் மிரட்டல் விடுத்து கடிதம் வெளியிட்டிருந்தார். பின்னர் அந்த நபரை போலீஸ் கைது செய்திருந்தது. இப்படியான சூழலில், தொண்டர்களின் வரவேற்புக்கு மத்தியில் சாலையில் மோடி நடந்து வந்தபோது அவரை நோக்கி கூட்டத்திலிருந்து செல்போன் போன்ற ஒரு பொருள் வீசப்பட்ட சம்பவம், அவரின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

கேரளாவில் மோடி
கேரளாவில் மோடி

முன்னதாக நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோவை தொடங்கி வைக்க கேரளா வந்தார் மோடி. கொச்சியில் சாலையின் இரு பக்கங்களிலும் தொண்டர்கள் திரண்டு மோடிக்கு வரவேற்பளித்தனர். மோடியும் தன்னுடைய காரிலிருந்து கீழிறங்கி சாலையில் மக்களுக்கு கை காட்டியபடி நடந்தார்.

மக்களும் மோடி மீது மலர் தூவினர். அப்போது ஒரு நபர் சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மோடியை நோக்கி செல்போன் போன்ற ஒன்றை வீசியிருக்கிறார். இதனைக் கண்ட மோடியின் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் மோடியை நோக்கி வந்த செல்போனை உடனடியாக தட்டிவிட்டார். இருப்பினும் மோடி மீது மலர் தூவும்போது செல்போன் கை தவறி விழுந்துவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் இன்னொரு அதிகாரியொருவர் செல்போனை அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோவை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டு, மோடியின் பாதுகாப்பு அதிகாரியைப் பாராட்டியிருந்தார்.