Published:Updated:

ஷின்சோ அபே கொலையைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமருக்குக் கொலை மிரட்டல் - ஒருவர் கைது!

சிங்கப்பூர் பிரதமர் ( ட்விட்டர் )

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லாங்குக்கு மர்மநபர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷின்சோ அபே கொலையைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமருக்குக் கொலை மிரட்டல் - ஒருவர் கைது!

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லாங்குக்கு மர்மநபர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சிங்கப்பூர் பிரதமர் ( ட்விட்டர் )

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கும் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திருக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

ஷின்சோ அபே
ஷின்சோ அபே

இந்த நிலையில், ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லி ஷியன் லாங்குக்கு ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து கொலை மிரட்டல் விடுத்த 45 வயதான நபரை போலீஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து லேப்டாப், நான்கு செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும், கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கொலை மிரட்டல் விடுத்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!