Published:Updated:

நெல்லை: சாட்சி சொல்ல தயாரான ரௌடி; வெட்டிக் கொன்ற கும்பல் - பழிக்குப் பழியாக நடந்தக் கொலை

ஒரு கொலை வழக்கில் இன்று ஆஜராகி சாட்சி சொல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவரை எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர். பல ஆண்டுகளாக உள்ள பகையைத் தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்துள்ளது.

நெல்லை: சாட்சி சொல்ல தயாரான ரௌடி; வெட்டிக் கொன்ற கும்பல் - பழிக்குப் பழியாக நடந்தக் கொலை

ஒரு கொலை வழக்கில் இன்று ஆஜராகி சாட்சி சொல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவரை எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர். பல ஆண்டுகளாக உள்ள பகையைத் தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்துள்ளது.

Published:Updated:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த பாளையஞ்செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பு என்பவரின் மகன் வைகுண்டம். 41 வயது நிரம்பிய அவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் . பிரபல ரௌடியான வைகுண்டம் மீது ஐந்து கொலை வழக்குகளும் பத்துக்கும் அதிகமான கொலை முயற்சி, அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கொலை செய்யப்பட்ட வைகுண்டம்
கொலை செய்யப்பட்ட வைகுண்டம்

கடந்த 2006-ம் ஆண்டு பாளையஞ்செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான ஜோசப் என்பவர் கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே அடுத்தடுத்து கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்தன. அதில், தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவருக்கு வலது கரமாக வைகுண்டம் செயல்பட்டு வந்துள்ளாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எதிரிகளால் ஆபத்து இருப்பதை உணர்ந்த வைகுண்டம், சொந்த கிராமத்தில் தங்கியிருக்காமல் நெல்லையில் வசித்து வந்தார். அவ்வப்போது அவர் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்து வந்துள்ளார். அதன்படி நேற்று அவர் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

கொலையான வைகுண்டம்
கொலையான வைகுண்டம்

ஏற்கெனவே நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் வைகுண்டம் இன்று சாட்சி சொல்ல வேண்டியதிருந்துள்ளது. அதற்கு எதிர்த்தரப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அவரை சாட்சி சொல்ல வரக்கூடாது என மிரட்டியுள்ளனர். ஆனால் அதை மீறி அவர் இன்று சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்லத் தயாராகியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டின் அருகே இருக்கும் பாளையங் கால்வாயில் குளித்துவிட்டு நீதிமன்றம் செல்லப் போவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு பைக்கில் கால்வாய்க்கு சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து வெட்டிச் சாய்த்துள்ளனர். கால்வாய் அருகே கிடந்த அவரது உடலை காவல்துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கதறும் குடும்பத்தினர்
கதறும் குடும்பத்தினர்

கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட இடத்துக்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ஜோசப் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வைகுண்டத்துக்கு தொடர்பு இருப்பதால் பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி கொலையாளிகளைத் தேடி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism