Published:Updated:

கே.எஸ்.அழகிரியைக் கண்டித்த மாநில நிர்வாகி பதவி பறிப்பு... குமரி காங்கிரஸில் நடப்பது என்ன?

கே.எஸ்.அழகிரி ( ட்விட்டர் )

``காமராஜர் கட்டிய சத்தியமூர்த்தி பவனை புரோக்கர்களின் கூடாரமாக மாற்றிவிட்டார் அழகிரி. தேர்தலுக்காகச் சீட்டுகளைப் பேரம் பேசி விற்கிறார். பதவி வேண்டுமென்றால் அங்குள்ள சில புரோக்கர்களை அணுகவேண்டிய நிலை உள்ளது’’ என்கிறார் ராஜன்.

கே.எஸ்.அழகிரியைக் கண்டித்த மாநில நிர்வாகி பதவி பறிப்பு... குமரி காங்கிரஸில் நடப்பது என்ன?

``காமராஜர் கட்டிய சத்தியமூர்த்தி பவனை புரோக்கர்களின் கூடாரமாக மாற்றிவிட்டார் அழகிரி. தேர்தலுக்காகச் சீட்டுகளைப் பேரம் பேசி விற்கிறார். பதவி வேண்டுமென்றால் அங்குள்ள சில புரோக்கர்களை அணுகவேண்டிய நிலை உள்ளது’’ என்கிறார் ராஜன்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி ( ட்விட்டர் )

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டாக்டர் பினுலால் சிங். இவரின் தலைமையில் மார்த்தாண்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராகப் போட்டி வேட்பாளராகக் களமிறங்கி வெற்றிபெற்றதுடன், காங்கிரஸ் தலைவர் வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக கூறி ஏழு கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஆனால், வட்டார, நகரத் தலைவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கட்சியிலிருந்து நீக்க மாவட்டத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. மாநிலத் தலைமை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவுக்குத் தெரியப்படுத்தி அவர்கள் மூலமாகத்தான் நீக்க வேண்டும். எனவே, கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லாது என கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டிருந்தார்.

பதவி பறிக்கப்பட்ட ஆர்.எஸ்.ராஜன்
பதவி பறிக்கப்பட்ட ஆர்.எஸ்.ராஜன்

இது கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோபமடைந்த காங்கிரஸ் மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் என்பவர், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை எதிர்த்து பேட்டி கொடுத்திருந்தார். ``கட்சியை எதிர்த்து வேலை செய்பவர்களை நீக்காமலிருந்தால் கட்சி எப்படி வளரும்... தலைவர் பதவிக்கே தகுதியற்றவர் அழகிரி" எனச் சாடியிருந்தார் ஆர்.எஸ்.ராஜன். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜனைக் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் காங்கிரஸ் மாநில விவசாய அணித் தலைவர் பவன்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.ராஜன், "காமராஜர் கட்டிய சத்தியமூர்த்தி பவனை புரோக்கர்களின் கூடாரமாக மாற்றிவிட்டார் அழகிரி. தேர்தலுக்காக சீட்டுகளைப் பேரம் பேசி விற்கிறார். பதவி வேண்டுமென்றால் அங்குள்ள சில புரோக்கர்களை அணுகவேண்டிய நிலை உள்ளது. அழகிரியை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அகற்றும் வரை ஓய மாட்டேன்" எனச் சபதம் போட்டிருக்கிறார். பத்துப்பேரை கட்சியிலிருந்து நீக்கியதால் கோபமாகக் கேள்வி கேட்ட ஆர்.எஸ்.ராஜன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங்
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங்

மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 10 நிர்வாகிகளை நீக்கியது செல்லாது என மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதை அடுத்து மேற்கு மாவட்டத் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமைக்கு நேரில் சென்று விளக்கம் கொடுத்திருக்கிறாராம். இது பற்றிக் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். "கட்சித் தலைமை அறிவித்த பேரூராட்சித் தலைவர் வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் குரல் எழுந்தது. அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினருமான தம்பி விஜயகுமார், நிர்வாகிகளை நாமே சஸ்பெண்ட் செய்துவிட்டு தலைமைக்குக் கடிதம் கொடுக்கலாம் என ஆலோசனை கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்தே ஏழு கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் நீக்கப்பட்டனர். பின்னர் கட்சித் தலைமை நீக்கியது செல்லாது என்றதால், மாவட்டத் தலைவர் சென்னைக்குச் சென்று நடந்த சம்பவங்களை விளக்கிக் கூறிவிட்டார். அடுத்த மாதம் 10-ம் தேதி நடக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்குழுக் கூட்டத்தில் 10 பேரும் நீக்கப்படவுள்ளனர்" என்றனர் சில நிர்வாகிகள்.

இது பற்றி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங்கிடம் பேசினோம். "கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து மாநிலத் தலைமைக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன். அதற்காக ஆர்.எஸ்.ராஜன் மாநிலத் தலைவரைத் தவறாகப் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியது. அது கண்டிக்கத்தக்கது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism