Published:Updated:

``பழைய பென்ஷன் திட்டம்; திமுக-வின் பொறுப்பு” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

மருத்துவ முகாமில் மாணிக்கம் தாக்கூா் எம்.பி.

``தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது தி.மு.க.வின் பொறுப்பு” என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

``பழைய பென்ஷன் திட்டம்; திமுக-வின் பொறுப்பு” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

``தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது தி.மு.க.வின் பொறுப்பு” என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

Published:Updated:
மருத்துவ முகாமில் மாணிக்கம் தாக்கூா் எம்.பி.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாமில் மாணிக்கம் தாக்கூா் எம்.பி.
மருத்துவ முகாமில் மாணிக்கம் தாக்கூா் எம்.பி.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்.பி பேசுகையில், ``இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்து நாட்டுக்கும், அனைத்து ஆட்சியாளர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும். அங்கு நடக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கிறது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையுடன் இருக்க இருக்க வேண்டிய தருணம் இது. மேலும் இலங்கையில் ஜனநாயக முறையில் அமையவிருக்கும் அரசுக்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். \

இந்தியாவில் ஜி.எஸ்.டி.கவுன்சில் ஜனநாயகப்பூர்வமான கவுன்சிலாக இருக்க வேண்டும். அது சர்வாதிகார கவுன்சிலாக இருக்கக்கூடாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவின் நிதி அமைச்சர் சிறுபிள்ளைத்தனமாக பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரத்துடன் பேச வேண்டும். மாநில அரசின் பிரச்னைகளை புரிந்து கொண்டு செயல்படும் ஜி.எஸ்.டி.கவுன்சிலாக இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் பெட்ரோல் - டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். ஜி.எஸ்.டி.கவுன்சிலை வைத்து மாநில அரசுகளை, மத்திய அரசு வஞ்சிக்கிறது. பல மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிபிடிப்பை மத்திய அரசு திருப்பி வழங்காமல் உள்ளது.

காங்கிரஸ் கட்சி பழைய பென்ஷன் திட்டத்தை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது போல் தமிழகத்திலும் நிதியமைச்சர் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேசமயம் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது தி.மு.க.வின் பொறுப்பு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism