‘தப்லீக் ஜமாஅத் எனும் இஸ்லாமிய அமைப்பினர், திட்டமிட்டு நாடு முழுக்க கொரோனா வைரஸைப் பரப்பிவருகிறார்கள்’ என்று சமூக ஊடகத்தில் வதந்திகளைப் பற்றவைத்துவருகிறார்கள் சமூகவிரோத சிந்தனைகொண்டவர்கள். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு, டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாஅத் அமைப்பின் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில், நாடு முழுவதுமிருந்து கலந்து கொண்டவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதன் பின்னணியில்தான் இப்படியொரு வதந்தி. இந்த நிலையில், ‘`கொரோனா விவகாரத்தை மதரீதியிலான பிரச்னையாக உருமாற்றாதீர்கள்’’ என்று பொறுப்புடன் கேட்டுக்கொண்டுள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன். ‘`சாதி, மதம் பார்த்து கொரோனா வருவதில்லை; வதந்தி பரப்புவது நம்மை நாமே அழித்துக்கொள்வதைப் போன்றது. சாதி, மதம்குறித்து வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விடம் பேசினோம். “தமிழக பா.ஜ.க தலைவரின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம், மத்திய பா.ஜ.க அரசில் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முக்தர் அப்பாஸ் நக்வி, தப்லீக் அமைப்பை தாலிபானோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

‘கொரோனா பரவிவிடாமல் தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்’ என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்த உடனேயே சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகள் சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடைவிதித்து தங்களைக் காத்துக்கொண்டன. ஆனால், இந்திய அரசு உரிய நேரத்தில் இதைச் செய்யத் தவறிவிட்டது. விமானநிலையத்தில் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனையை சரிவர செய்யவில்லை. அதனாலேயே, இன்றைக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், தாங்கள் செய்த தவற்றை மறைக்கவும் அரசியல்ரீதியாக லாபம் அடையவும், ‘தப்லீக் ஜமாஅத்’ மீது பழியைச் சுமத்தி மதரீதியிலான பிரச்னையாகத் திசைதிருப்புகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே நடைபெற்றது தப்லீக் ஜமாஅத் மாநாடு. இதில் கலந்துகொண்டவர்களிடையே கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது சரியான நடவடிக்கைதான். அதேநேரம், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட உ.பி முதல்வர் கலந்துகொண்ட மத நிகழ்ச்சி, கர்நாடக முதல்வர் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி என சட்டத்தை மீறி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றிருக் கின்றன. இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டவர்களில் எவ்வளவு பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றியெல்லாம் இப்போது வரை விசாரணைகூட செய்யவில்லை.

ஆனால், ‘கொரோனா வைரஸைப் பரப்பியவர்களே தப்லீக் அமைப்பினர் தான்’ என்பதுபோன்ற பொய்யான செய்தியை, திட்டமிட்டு மக்கள் மத்தியில் விதைத்துவிட்டார்கள் சிலர். மத்திய அரசும் அமைதி காக்கிறது. ஆக, மத்திய பா.ஜ.க அரசின் மதவாத அரசியலுக்கு இப்போது ‘தப்லீக் ஜமாஅத்’ அமைப்பை பலிகடாவாக்கி இருக்கி றார்கள்’’ என்றார் கொதிப்புடன்.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வழிகாட்டுக் குழுத் தலைவரான முகம்மது ரூஹுல் ஹக், “மாநில ஜமா அத் உலமா மற்றும் தேசிய அளவிலான இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம், ‘கொரோனா நோய்த்தொற்று என்பது பொதுவான பிரச்னை. இதை மதரீதியில் பார்க்கக் கூடாது’ என அறிவித்துவிட்டன. இதற்குமேல் இதுபற்றி நான் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை’’ என்று முடித்துக்கொண்டார்.

மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது எழும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசியபோது, “கொரோனா விவகாரத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே மத்திய அரசு எடுத்துவந்திருக்கிறது.

‘தப்லீக் அமைப்பின் மாநாட்டுக்குப் போய் வந்தவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டிருக்கிறது’ என ஒவ்வொரு மாநில ரிப்போர்ட்டிலுமிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆக, உள்ளங்கை நெல்லிக் கனிபோல் உண்மை தெளிவாக இருக்கும்போது, மற்ற விஷயங்களைச் சுட்டிக்காட்டுவதும் மதரீதியான பிரச்னை என்று மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவதும் தவறானது.

சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனைக்கு ஒத்துழைத்தால், பிரச்னையே இல்லை. ஆனால், பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து மத்தியப்பிரதேசத்தில், இந்த அமைப்பினர் செய்த கலாட்டாக்கள் வீடியோக்களாக இப்போது வெளிவருகின்றன. இதையெல்லாம் பார்க்கும் பொதுமக்கள், ‘இது மதரீதியிலானதோ’ என எண்ணிவிடுவதற்கு அவர்களே காரணமாகி விடுகிறார்கள்’’ என்றார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் தேவையின்றி பேசுவதைத் தவிர்ப்பதும், டெல்லி சென்று வந்தவர்கள் அனைவருமே தாங்களாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு சிகிச்சைக்கு ஒத்துழைப்பதும்தான் ஒரே தீர்வு.