Published:Updated:

மன்னை அம்பிகாபதி மறைந்தார்!

அம்பிகாபதி
பிரீமியம் ஸ்டோரி
அம்பிகாபதி

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அம்பிகாபதி, சோவியத் ரஷ்யாவுக்குச் சென்று வந்த பிறகுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மன்னை அம்பிகாபதி மறைந்தார்!

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அம்பிகாபதி, சோவியத் ரஷ்யாவுக்குச் சென்று வந்த பிறகுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Published:Updated:
அம்பிகாபதி
பிரீமியம் ஸ்டோரி
அம்பிகாபதி

தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வருவதற்கும், தமிழ்நாட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாவதற்கும் காரணமாக இருந்தவர் மன்னை அம்பிகாபதி. இடதுசாரித் தோழர், இலக்கிய ஆளுமை, மிடுக்கான தோற்றம், கம்பீரமான பேச்சு, மக்களுக்கான போராட்டங்கள் என இந்தப் பகுதியின் முக்கிய ஆளுமையாக இருந்த அம்பிகாபதி தனது 83-வது வயதில் ஜூலை 14-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், மன்னார்குடி தொகுதியில் 1977, 80 ஆகிய ஆண்டுகளில் இரு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்பிகாபதியின் மறைவுச் செய்தி, டெல்டா மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

“தோழர் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்தவர். ஆனாலும், கம்ப ராமாயணத்தை இலக்கிய நயத்துடன் விவரிப்பார். பாரதியார் பாடல்களை அழகாகப் பாடுவார். விவசாயத் தொழிலாளர் களுக்காக நில மீட்பு போராட்டங்கள், கூலி உயர்வு போராட்டங்களை முன்னின்று நடத்தி சிறைக்குச் சென்றவர். அந்தக் காலத்தில், `சைக்கிளில் இருவராகப் போகக் கூடாது’ என்று அரசு தடை விதித்தது. இதனால், ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். சட்டமன்றத்தில் பேசி அந்தத் தடையை நீக்கவைத்தார் தோழர்.

அம்பிகாபதி
அம்பிகாபதி

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அம்பிகாபதி, சோவியத் ரஷ்யாவுக்குச் சென்று வந்த பிறகுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு சில காலம் அ.தி.மு.க-வில் இருந்தார். மீண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்டார்” என்றார்கள் அம்பிகாபதிக்கு நெருக்கமானவர்கள். இவரின் மகன் வழக்கறிஞர் மு.அ.பாரதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism