Published:Updated:

'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - 24 மணி நேரத்துக்குள் முடிவை மாற்றிய மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

24 மணி நேரத்துக்குள் முடிவை மாற்றிய மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - 24 மணி நேரத்துக்குள் முடிவை மாற்றிய மன்சூர் அலிகான்

24 மணி நேரத்துக்குள் முடிவை மாற்றிய மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

Published:Updated:
மன்சூர் அலிகான்

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஏற்கெனவே, அங்கு அ.தி.மு.க தரப்பில் அமைச்சர் வேலுமணியும், தி.மு.க-வில் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களம் காண்கின்றனர்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக, வேலுமணி தரப்பில் மன்சூர் அலிகானைக் களமிறக்கியிருப்பதாக தி.மு.க-வினர் குற்றம்சாட்டினர். இந்தநிலையில், திடீரென்று மன்சூர் அலிகான் தேர்தலிலிருந்து விலகுவதாகவும், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் நேற்று மாலை அறிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டிருந்த ஆடியோவில், ``நான் இந்தத் தேர்தல்ல போட்டியிட வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். தொகுதியில எங்க போனாலும், ‘பாய் எவ்ளோ பணம் வாங்கினீங்க?’னு எல்லாருமே கேக்கிறாங்க. கமல் கட்சியிலயும் பாயத்தான் நிறுத்திருக்காங்க. `பாய் ஓட்டைப் பிரிக்கத்தானே நிக்கறீங்க?’னு கேக்கிறாங்க.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

பத்துல எட்டுப் பேர் ஒருமாதிரி பாக்கறாங்க. எனக்குச் சங்கடமா இருக்கு. அதனால, இந்தத் தேர்தல் வேணாம்னு முடிவு பண்ணி சென்னை கிளம்பிட்டேன். மக்கள் நல்லவங்களை தேர்ந்தெடுப்பாங்க. ஒரு சில இடங்கள்ல பிரசாரம் மட்டும் பண்ணுவேன். நான் தொண்டாமுத்தூர்ல போட்டியிடவில்லை” எனக் கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், இன்று தனது முடிவை மாற்றிக்கொண்டு மதியம் பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தார் மன்சூர் அலிகான். சுயேச்சையாகப் போட்டியிடுவதால் சின்னம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு மன்சூர் அலிகான் செய்தியாளர்களைச் சந்தித்தார். ``திரும்பி வந்துட்டேன்னு சொல்லு... போற இடத்துல எல்லாம் பணம் வாங்கிட்டியான்னு கேக்கறது, வாடகைக்கு வீடு கொடுக்காம பண்றதுனு என்னைய சோர்வடையவைக்க நிறைய பண்ணினாங்க.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

என்னை அனுப்பறதுக்காகத் திட்டம் போட்டிருக்காங்க. அதனால யார் ஆதாயம் அடையப்போறாங்கனு தெரிஞ்சு, அவங்களை ஒரு வழி பண்ணணும்னு கோதாவுல இறங்கிட்டேன். அப்படியெல்லாம் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

தென்னந்தோப்பு சின்னத்தைக் கேட்டு வாங்கியிருக்கேன். தொண்டாமுத்தூர்ல தென்னை மரம்தான் நிறைய இருக்கு. அதுதான் அதிக வருவாய் தருது. அந்த வருவாயைப் பெருக்குவேன். பிரசாரத்துலயும் மரங்களை நடுவேன். வாளை உருவியாச்சு. இனி சில கிளைகளை வெட்டிச் சாய்ச்சுதான் வாளை உள்ளேவைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

இங்கதான் இருக்கேன். நான் எங்கேயும் போகலை. கொங்கு மண்டலம் என் சொந்த ஊரு. நான் பிறந்த ஊரு ஜவ்வாதுபட்டி. என் சொந்த மண்ணுல நிக்காம நான் எங்கே நிக்க முடியும்?” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism