Published:Updated:

உத்தரகாண்ட்: `கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!' - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ( ட்விட்டர் )

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும்.

உத்தரகாண்ட்: `கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!' - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும்.

Published:Updated:
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ( ட்விட்டர் )

இந்தியாவில் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவருவது பா.ஜ.க-வின் முக்கியத் திட்டங்களில் ஒன்று. அதனடிப்படையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவருகிறார்கள். ஏற்கெனவே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மதமாற்றத் தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதற்கு முன்னதாக பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்திலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத சுதந்திரச் சட்டம்-2018 நிறைவேற்றப்பட்டது.

பாஜக
பாஜக

இந்த மசோதாவின் அடிப்படையில், எந்தவொரு நபரும் மற்றொருவரை வேறு மதத்துக்கு கட்டாயமாக மாற்றுவது தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுவருகிறது. அதன் பிறகு, லவ் ஜிகாத்தின் மூலம் மதமாற்றம் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றச் சட்டத்தைக் கடுமையாக்க உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.

அதனடிப்படையில், ஏற்கெனவே இருந்த மதச் சுதந்திரச் சட்டத்தை திருத்தி நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதில், `கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும். மேலும் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். குற்றவாளிக்கு ரூ.25,000 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

பாஜக
பாஜக

இது தொடர்பாக மத விவகார அமைச்சர் சத்பால் மகாராஜ், "இந்திய அரசியலமைப்பின் 25, 26, 27-28 பிரிவுகளின் கீழ், மதச் சுதந்திரத்துக்கான உரிமையின் முக்கியத்துவத்தை சமமாக வலுப்படுத்துவதற்காக, `மதச் சுதந்திரச் சட்டம் 2018'-லுள்ள சில சிரமங்களை அகற்றி, திருத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.