Published:Updated:

``மாயாவதியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால்..." - பகுஜன் சமாஜ் கட்சி சொல்வதென்ன?

மாயாவதி

`மாயாவதி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சேரலாம்’ என பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியை அமைக்கும் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல் நீடித்துவரும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையத் தயாராக இருக்கிறோம் எனக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

மாயாவதி
மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தரம்வீர் சௌத்ரி, ``எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்பான இறுதி முடிவை மாயாவதிதான் எடுப்பார். மாயாவதி நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதி. அவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.

அகிலேஷ் யாதவைவிட மாயாவதி நன்கு அறியப்பட்ட தலைவர். உத்தரப்பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராகப் பதவி வகித்திருக்கிறார். அகிலேஷ் யாதவ் ஒரு முறைதான் முதல்வராக இருந்திருக்கிறார். மாயாவதி பரந்துபட்ட மனசுகொண்ட தலைவர். மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அகிலேஷ் ஏற்றுக்கொண்டால் அவரை மாலை அணிவி்த்து வரவேற்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.