Published:Updated:

மயிலாடுதுறை: ஆங்கிலேயர் காலத்து மணிக்கூண்டு - 6 ஆண்டுகளுக்குப் பிறகு இயங்கியதால் மக்கள் மகிழ்ச்சி!

மயிலாடுதுறை

மணிக்கூண்டு கடிகாரத்தைச் சொந்தச் செலவில் சரிசெய்த 23 வயது பட்டதாரி இளைஞரான நகரமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: ஆங்கிலேயர் காலத்து மணிக்கூண்டு - 6 ஆண்டுகளுக்குப் பிறகு இயங்கியதால் மக்கள் மகிழ்ச்சி!

மணிக்கூண்டு கடிகாரத்தைச் சொந்தச் செலவில் சரிசெய்த 23 வயது பட்டதாரி இளைஞரான நகரமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
மயிலாடுதுறை

மயிலாடுதுறையின் பாரம்பர்ய அடையாளச் சின்னமாக விளங்கும் மணிக்கூண்டு கடிகாரத்தைச் சொந்தச் செலவில் சரிசெய்த 23 வயது பட்டதாரி இளைஞரான நகரமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை கடைவீதியில் நடு நாயகமாக இருக்கும் மணிக்கூண்டு 1943-ம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரரால் திறந்துவைக்கப்பட்டது.

உலகப் போரில் இங்கிலாந்து தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது, போர் நடந்த எல்லா இடங்களிலும் ஜெர்மனி வெற்றிபெற்றது. இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக முதன்முறையாக துனிசியாவில் நடந்த போரில் ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் நினைவுச்சின்னமாக மயிலாடுதுறை மணிக்கூண்டை அப்துல்காதர் என்பவர் கட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பின்னர் மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இந்த மணிக்கூண்டு மாறிவிட்டது. அந்தக் காலத்தில் இந்த மணிக்கூண்டிலுள்ள கடிகாரத்தைப் பார்த்தே மக்கள் நேரத்தைத் தெரிந்துகொண்டனர். இதிலுள்ள கடிகாரம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படாமல் இருந்தது. மக்கள் இது தொடர்பாகப் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சௌ.சர்வோதயன்
சௌ.சர்வோதயன்

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 16-வது வார்டு தி.மு.க நகர்மன்ற உறுப்பினரான 23 வயது பட்டதாரி இளைஞர் சர்வோதயன், தனது சொந்தச் செலவில் மணிக்கூட்டில் உள்ள கடிகாரத்தைச் சரிசெய்து கொடுத்துள்ளார். மேலும் மணிக்கூண்டில் பல ஆண்டுகளாக எரியாமல் இருந்த மின்விளக்கையும் சரிசெய்துள்ளார். பதவிக்கு வந்தவுடனேயே சொந்தச் செலவில் சேவையைத் தொடங்கிய சர்வோதயன் செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism