Published:Updated:

``திருக்குறளையும், தமிழ் மொழியையும் பேசி ஆளுநர் ரவி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்!" - வைகோ தாக்கு

``மத்திய அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவந்து, பல மதங்களைக்கொண்ட இந்திய நாட்டில் சிக்கல்களை உருவாக்க முயல்கிறது." - வைகோ

``திருக்குறளையும், தமிழ் மொழியையும் பேசி ஆளுநர் ரவி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்!" - வைகோ தாக்கு

``மத்திய அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவந்து, பல மதங்களைக்கொண்ட இந்திய நாட்டில் சிக்கல்களை உருவாக்க முயல்கிறது." - வைகோ

Published:Updated:

ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதிக்கும் சூழல் மத்திய பா.ஜ.க அரசால் ஏற்பட்டிருக்கிறது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ம.தி.மு.க-வில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தொடங்கியிருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் கட்சியின் கிளை, மாவட்டத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன.

அமித் ஷா, யோகி, மோடி
அமித் ஷா, யோகி, மோடி

ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதிக்கும் சூழல் பா.ஜ.க அரசால் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவந்து பல மதங்களைக்கொண்ட இந்திய நாட்டில் சிக்கல்களை உருவாக்க முயல்கிறது. இந்தி, சம்ஸ்கிருத மொழிகளைக் கட்டாயமாக்க நினைக்கிறது. திட்டமிட்டு காஷ்மீரின் 370-வது அரசியல் சட்டப் பிரிவை ரத்துசெய்தது.

தமிழகத்தில் திருக்குறளையும், தமிழ் மொழியையும் பேசி ஆளுநர் ரவி மக்களை ஏமாற்ற நினைக்கிறார். அதேபோல மாநில அரசை மீறி, போட்டியாகத் துணைவேந்தர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்துகிறார். நான் நாடாளுமன்றத்தில் ஆளுநர் பதவியையே அகற்ற வேண்டும் எனப் பேசியிருக்கிறேன். பிரபல செய்தி நிறுவனம் தமிழகத்தை முதன்மையான மாநிலமாக அறிவித்திருக்கிறது. மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பாக விமர்சனம் இருக்கிறது. ஆனால், கட்டண உயர்வுக்குப் புதிய மின் திட்டம் கொண்டுவர மத்திய அரசின் அழுத்தம் ஒருபுறம் இருந்தது.

எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையிலிருந்து ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டது எனக்கு மகிழ்ச்சியான தருணம். அதை தாமதப்படுத்தியதும் ஆளுநர்தான். பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது எதிர்க்கட்சிகள் இதைப் பேச ஆரம்பித்துவிட்டன. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பெரும் வெற்றிபெற்று, வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்திருப்பதாக ஊடகங்கள் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தகாலத்தில் பெரும் பணத்தை பா.ஜ.க செலவு செய்திருக்கிறது" என்றார்.