Published:Updated:

ம.தி.மு.க-வின் 28 ஆண்டுகள்... ட்ரெண்டிங்கில் #MDMK28 ஹேஷ்டேக்!

வைகோ
வைகோ

சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றதால் மகிழ்ச்சியில் இருக்கும் ம.தி.மு.க-வினர், தங்கள் கட்சியினர் தொடக்க நாளான இன்று (மே 6-ம் தேதி) #MDMK28 என்ற ஹேஷ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்டு ஆக்கியிருக்கிறார்கள்.

தி.மு.க-வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய வைகோவும் அவரின் ஆதரவாளர்களும் பல்வேறு காரணங்களால் 1993-ம் ஆண்டு தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டனர். அதன் பிறகு, 1994-ம் ஆண்டு மே 6-ம் தேதி சென்னையில் கூடிய பொதுக்குழுவில் புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்கள் உருவாக்கப்பட்டன.

ட்வீட்
ட்வீட்

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி, மத்திய அமைச்சரவையில் பங்கேற்பு, தேர்தல் புறக்கணிப்பு என பல வெற்றிகளையும் தோல்விகளையும் சவால்களையும் எதிர்கொண்டு 28 ஆண்டுகளாக வைகோ தலைமையில் ம.தி.மு.க பயணித்துக்கொண்டிருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க-வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றிபெற்றார்.

பிறகு, மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை வைகோவுக்கு தி.மு.க வழங்கியது. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

வைகோ
வைகோ

போட்டியிட்ட ஆறு தொகுதிகளில், நான்கு தொகுதிகளில் ம.தி.மு.க-வுக்கு வெற்றி கிடைத்தது. தற்போது நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்றம் என மூன்று அவைகளிலும் ம.தி.மு.க-வின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். மே 7-ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.

திமுக எதிரி; அதிமுக மீது சவாரி - தமிழ்நாட்டில் இனி பா.ஜ.க-வின் வளர்ச்சி எப்படியிருக்கும்?

இந்த நிலையில், ம.தி.மு.க-வின் தொடக்க நாளை (மே 6) ம.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். முக்கியமாக, ம.தி.மு.க-வைச் சேர்ந்த இளைஞர்கள் #MDMK28 என்ற ஹேஷ்டாக் உருவாக்கி, அகில அதை ட்விட்டரில் ட்ரெண்டு ஆக்கியிருக்கிறார்கள்.

வைகோ
வைகோ

அதில், தங்களின் நேசத்துக்குரிய தலைவர் வைகோவின் பெருமைகள், அவரது செயல்பாடுகள் மற்றும் மீத்தேன், பெரியாறு அணை, ஸ்டெர்லைட், ஏழு தமிழர் விடுதலை என கடந்த 28 ஆண்டுகளில் ம.தி.மு.க நடத்தியுள்ள முக்கியப் போராட்டங்கள் போன்றவற்றை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு