Published:Updated:

``நீதிமன்றங்களின் வேலையை ஊடகங்களே செய்கின்றன!" - திரிணாமுல் அமைச்சர் கைது விவகாரத்தில் மம்தா ஆவேசம்

மம்தா பானர்ஜி

``எந்தவொரு தீங்கிழைக்கும் ஊடக பிரசாரத்திற்கும் நான் எதிரானவள். மேலும், ஊடகங்களே நீதிமன்றங்களின் வேலையைச் செய்கின்றன." - மம்தா பானர்ஜி

``நீதிமன்றங்களின் வேலையை ஊடகங்களே செய்கின்றன!" - திரிணாமுல் அமைச்சர் கைது விவகாரத்தில் மம்தா ஆவேசம்

``எந்தவொரு தீங்கிழைக்கும் ஊடக பிரசாரத்திற்கும் நான் எதிரானவள். மேலும், ஊடகங்களே நீதிமன்றங்களின் வேலையைச் செய்கின்றன." - மம்தா பானர்ஜி

Published:Updated:
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில், பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற ஏஜென்சிகளை பயன்படுத்துவதாக திரிணாமுல் தரப்பிலிருந்து குற்றம்சாட்டப்பட்டது.

திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி
திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி

இந்த நிலையில் அமைச்சரின் கைது தொடர்பாகப் பேசிய மம்தா, ``நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தும்போது, ​​​​அதில் தவறுகள் இருக்கலாம். யாரேனும் அந்த தவறை செய்திருந்தால், அது சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அவர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தவொரு தீங்கிழைக்கும் ஊடக பிரசாரத்திற்கும் நான் எதிரானவள். மேலும், ஊடகங்களே நீதிமன்றங்களின் வேலையைச் செய்கின்றன. இதனை மூத்த நீதிபதி கூட அண்மையில் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அது மட்டுமல்லாமல் தொழிலதிபர்களும், எதிர்க்கட்சிகளும் மத்தியில் ஆளும் பாஜக-வின் உத்தரவின்பேரில் ஏஜென்சிகளால் அச்சுறுத்தப்படுகின்றனர். பாரபட்சமில்லாமல் ஏஜென்சிகள் செயல்பட்டால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கட்சிகளை அவதூறாகப் பேச இவற்றைப் பயன்படுத்தப்படக் கூடாது" என்றார்.

மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய மம்தா, ``எண்ணிக்கைகள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பற்றி என்னால் பேச முடியும். இருப்பினும், பா.ஜ.க ஆட்சிக்கு வராது என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.