Published:Updated:

அன்பில் மலர்ந்த செந்தாமரை!

சுஷ்மா ஸ்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
சுஷ்மா ஸ்வராஜ்

‘எங்களுக்கு மறுஜென்மத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், சுஷ்மாவுக்காக அதை வேண்டுகிறேன்.

அன்பில் மலர்ந்த செந்தாமரை!

‘எங்களுக்கு மறுஜென்மத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், சுஷ்மாவுக்காக அதை வேண்டுகிறேன்.

Published:Updated:
சுஷ்மா ஸ்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
சுஷ்மா ஸ்வராஜ்

வர் மீண்டும் பிறக்கவேண்டும். அதுவும் எங்கள் நாட்டில்... இங்கு, அரசியல்வாதியாக அவர் பணியாற்ற வேண்டும்’ என்று ஒரு சமூக ஊடகப்பதிவு. பதிவிட்டவர் ஒரு பாகிஸ்தானி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘மாற்றுத்தரப்பின் மனதை வெல்வதே வெற்றி’ என்று சொல்வார்கள் ஞானியர். அந்த வகையில், இந்தியாவின் வெற்றிகரமான அரசியல்வாதி சுஷ்மா ஸ்வராஜ். ஆகஸ்ட் ஆறாம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இதுவும் பாகிஸ்தான் தொடர்புடையதுதான். அந்தக் குழந்தையின் பெயர் ஷீரின் சிராஸ். அவளுக்கு அப்போது ஒரு வயது. ஆனால் இதயத்தில் பெரும் கோளாறு. உயிர் காக்கும் சிகிச்சைக்கு பாகிஸ்தானில் வசதியில்லை. ‘இந்தியாவுக்குக் கொண்டு போனால் அவள் பிழைப்பாள்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்து கிறார்கள். அடுத்த நாளிலிருந்து இந்தியத்தூதரகம் வந்து மருத்துவ விசாவுக்காக மன்றாடுகிறார், குழந்தையின் தாய். ஆனால், விசா மறுக்கப்படுகிறது. பல நாள் அலைந்தும் பயனில்லை. இந்தியத் தூதரகத்தில் இருக்கும் ஏதோ ஓர் ஊழியர், ‘சுஷ்மாவை அணுகுங்கள்’ என்கிறார்.

அந்தத்தாய் உடனே சுஷ்மாவுக்கு ட்விட்டரில் விஷயத்தை எழுதுகிறார், ‘மேடம்... என் மகளைக் காப்பாற்றுங்கள்’ என்று வேண்டுகோள் வைக்கிறார். அடுத்த சில நாள்களில் அவரை நேரில் அழைத்து விசாவைக் கையளித்தது இந்தியத்தூதரகம். இப்போது, சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிறாள் ஷீரின்.

அன்பில்  மலர்ந்த  செந்தாமரை!

2014-ம் ஆண்டு, ஈராக்கில் 46 இந்தியச் செவிலியர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர், தீவிரவாதிகள். சுஷ்மா அமைதியைத் தொலைத்திருந்த காலம் அது. நாளுக்குநாள் நெருக்கடிகள் அதிகரித்தன. ஆனால், ‘தூதரகம் மூலமாகத் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் நலத்துடன் நாடு திரும்புவார்கள்’ என்று உறுதியளித்தார் சுஷ்மா. சொன்னதைச் செய்துகாட்டினார். அனைவரும் திரும்பினார்கள், நலத்துடன். அப்போது கேரள முதல்வராக இருந்த காங்கிரஸின் உம்மன் சாண்டி, இப்போது தள்ளாத வயதிலும் டெல்லி சென்று சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்திருக்கிறார்.

2013, ஆகஸ்ட் 20-ம் தேதி. நாடாளுமன்றத்தில் உணவுப்பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சுஷ்மா அப்போது எதிர்க்கட்சித் தலைவர். அன்று, சோனியா காந்தியை நோக்கி விமர்சனங்களாக விளாசித்தள்ளினார் சுஷ்மா. அதேநாள்தான், உடல்நலக் குறைவு காரணமாக சோனியா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அன்று முதலாவ தாகச் சென்று பார்த்த குழுவில் முக்கியமாக இருந்தவர் சுஷ்மா. இந்தப் பண்பால்தான், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருக்குப் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். எல்லோருமே அவரைப்பற்றிய புதுப்புதுக் கதைகளுடன் காட்சிக்கு வருகிறார்கள். ஒரு சில அரசியல்வாதி களுக்கு மட்டுமே வாய்க்கக்கூடிய பேறு இது.

சுஷ்மா சர்ச்சைக்கு அப்பாற்பட்டவராக இருக்கவில்லை. லலித்மோடிக்கு விசா கிடைக்க உதவியது, அறம் மீறிய செயலாகப் பார்க்கப்பட்டது. 1998-ம் ஆண்டு பெல்லாரியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டார் சுஷ்மா. அப்போது, ‘இத்தாலிப்பெண்ணா, இந்தியப்பெண்ணா’ என்று எல்லா மேடைகளிலும் முழங்கினார். அந்தத் தேர்தலில் அவர் தோற்றார். இது மட்டுமல்ல; கரசேவை முதல் காஷ்மீர் வரை, கட்சியின் எல்லாவிதமான அரசியலையும் அவர் நியாயப்படுத்திப் பேசினார். இதையெல்லாம் வேறு யார் செய்திருந்தாலும் எவரும் எதுவும் கேட்டிருக்கப்போவதில்லை. ஆனால், செய்தவர் சுஷ்மா... அதனாலயே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இருப்பினும், இந்தியாவின் பெரிதும் நேசிக்கப்பட்ட மக்கள் தலைவராகவே எப்போதும் இருந்தார். இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்புகூட, `நான் மக்களுடன் இருக்கவே விரும்புகிறேன். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்போகிறேன்’ என்று பேசியது, அவர் அரசியலையும் மக்களையும் இந்த தேசத்தையும் எவ்வளவு நேசித்தார் என்பதைக் காட்டுவதாக இருந்தது.