Published:Updated:

மெட்ரோ பணிகளுக்காக இடம் மாறுகிறதா மெரினா-காந்தி சிலை?!

மெரினா-காந்தி சிலை

புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக, இந்த காந்தி சிலை இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மெட்ரோ பணிகளுக்காக இடம் மாறுகிறதா மெரினா-காந்தி சிலை?!

புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக, இந்த காந்தி சிலை இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
மெரினா-காந்தி சிலை

சென்னை மெரினா கடற்கரையில் 60 ஆண்டுகள் பழைமைவாய்ந்த காந்தி சிலை இருக்கிறது. 1959-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் நேரு, தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் முன்னிலையில், 12 அடி காந்தி சிலை கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.

காந்தி சிலை
காந்தி சிலை

இந்த நிலையில், புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக, இந்த காந்தி சிலை இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, சென்னை பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையே சுரங்க மெட்ரோ ரயில் பாதைப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதில், கலங்கரை விளக்கத்துக்கான மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சுரங்கப்பாதை, மெரினாவில் காந்தி சிலை இருக்கும் பகுதியின் அடியில், சுரங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளின்போது காந்தி சிலை சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதைப் பாதுகாப்பான முறையில் இடமாற்றம் செய்ய, அரசு அதிகாரிகள், மெட்ரோ கட்டுமானப் பொறியாளர்கள் கலந்தாலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர், ``மெட்ரோ பணிகளின்போது, காந்தி சிலை சேதமடைவதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலையை மாற்று இடத்தில் வைக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான சிறந்த தேர்வாக, சென்னை மாநகராட்சியின் வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை வளாகத்தின் நுழைவாயிலில் காந்தி சிலையை மாற்றி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். மெட்ரோ பணிகள் முடிவடைந்த பிறகு, மீண்டும் காந்தி சிலை மெரினா கடற்கரையிலேயே நிறுவப்படும். இது குறித்த அரசாங்க அறிவிப்பு விரைவில் வெளிவரும்" எனத் தெரிவித்தார்.

சுமார் 60 ஆண்டுகள் பழைமையான காந்தி சிலைக்குச் சேதம் ஏற்படாமலிருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism