Published:Updated:

``காஷ்மீரில் தீவிரவாதம்; பாகிஸ்தானுடன் பேசி தீர்வு காணுங்கள்!" - ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா

`காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை மக்கள் இறந்து கொண்டே இருப்பார்கள். தீவிரவாதம் முடிவுக்கு வராது. எனவே, நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் பேசி அதன் தீர்வைத் தேடுங்கள்.' - ஃபரூக் அப்துல்லா

``காஷ்மீரில் தீவிரவாதம்; பாகிஸ்தானுடன் பேசி தீர்வு காணுங்கள்!" - ஃபரூக் அப்துல்லா

`காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை மக்கள் இறந்து கொண்டே இருப்பார்கள். தீவிரவாதம் முடிவுக்கு வராது. எனவே, நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் பேசி அதன் தீர்வைத் தேடுங்கள்.' - ஃபரூக் அப்துல்லா

Published:Updated:
ஃபரூக் அப்துல்லா

காஷ்மீர் நகரின் லால் பஜார் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் முஷ்தாக் அகமது என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தீவிரவாத செயலுக்கு ஸ்ரீநகரின் லோக்சபா எம்.பி-யான ஃபரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சப் இன்ஸ்பெக்டர் முஷ்தாக் அகமதின் மகன் 2020-ல் ராணுவத்தால் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். தற்போது முஷ்தாக் அகமது தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். இங்குள்ள மக்களின் மீட்பர் யார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் முஷ்தாக் அகமது கொல்லப்பட்டதைக் கண்டித்து அவருக்காகப் பிரார்த்தனை செய்கிறோம்,.இந்த இழப்பை அவர் குடும்பத்தினர் தாங்கிக் கொள்ளப் பிரார்த்திக்கிறோம்.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

பா.ஜ.க அமைச்சர்களும், மற்ற தலைவர்களும் காஷ்மீரில் தீவிரவாதம் முடிந்துவிட்டதாக அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஆனால் நீங்கள் காஷ்மீர் மக்களின் இதயங்களை வெல்ல முயற்சிக்காதவரை இது முடிவுக்கு வராது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை மக்கள் இறந்து கொண்டே இருப்பார்கள். தீவிரவாதம் முடிவுக்கு வராது. எனவே, நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் பேசி அதன் தீர்வைத் தேடுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர்

இலங்கை மக்கள் இந்த இக்கட்டான காலத்திலிருந்து மீண்டு வரவும், இலங்கையின் தற்போதைய நிலையை இந்தியா எதிர்கொள்ளாமல் இருக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். மேலும், இலங்கையின் நிலையை இறைவன் இந்த அரசுக்குப் புரிய வைக்கட்டும். அது போன்ற சூழலை இங்குத் தவிர்க்க ஆளும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு.

தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை உணவு, கலாசாரம், மொழி, வானிலை என அனைத்தும் மாறுபட்டது. ஆனாலும் நம்மை ஒன்றாக வைத்திருப்பது இந்தியாவின் ஒருமைப்பாடுதான். எனவே, வேற்றுமையில் ஒற்றுமையை உடைக்க முயன்றால், இந்த நாடு துயரத்தில் விழும். அதன்பிறகு அந்த வேற்றுமையை வெளியேற்றுவது மிகவும் கடினமாகிவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.