Published:Updated:

பாலிடிக்ஸ் பல்ஸ்! - ஜூ.வி மினி சர்வே

ஜூ.வி மினி சர்வே
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி மினி சர்வே

‘எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடு?’ என்கிற நமது முதல் கேள்விக்கு பெரும்பான்மையாக 45.2 சதவிகிதம் பேர் ‘சுமார்’ என்று பதிலளித்திருக்கின்றனர்.

பாலிடிக்ஸ் பல்ஸ்! - ஜூ.வி மினி சர்வே

‘எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடு?’ என்கிற நமது முதல் கேள்விக்கு பெரும்பான்மையாக 45.2 சதவிகிதம் பேர் ‘சுமார்’ என்று பதிலளித்திருக்கின்றனர்.

Published:Updated:
ஜூ.வி மினி சர்வே
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி மினி சர்வே
ஆரம்பமாகிவிட்டது தேர்தல் திருவிழா. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருப்பதால், இப்போதே தேர்தல் விளம்பரத்துக்குச் சுவர்களைத் தேடத் தொடங்கிவிட்டன கட்சிகள். இந்தநிலையில், மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய, மினி சர்வே எடுக்கக் களமிறங்கியது ஜூனியர் விகடன் படை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்காக, பத்துக் கேள்விகள் அடங்கிய சர்வே படிவம் தயாரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர்களைச் சந்தித்து மினி சர்வே நடத்தப்பட்டது. முதன்முறையாக வாக்களிக்கவிருக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் முதல் வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் வரை பல்வேறு தரப்பினரும் இந்த சர்வேயில் பங்களித்தனர். விகடன் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என 41 பேர் சர்வே பணியை மேற்கொண்டனர். மொத்தம் 4,204 ஆண்கள், 3,674 பெண்கள், 122 மூன்றாம் பாலினத்தவர் என்று 8,000 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மினி சர்வே, வாக்காளர்களின் பல்ஸை அறிந்துகொள்ளும் ஆரம்பப்புள்ளியே.

பாலிடிக்ஸ் பல்ஸ்! - ஜூ.வி மினி சர்வே

“எடப்பாடி ஆட்சி சுமார்தான்!”

‘எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடு?’ என்கிற நமது முதல் கேள்விக்கு பெரும்பான்மையாக 45.2 சதவிகிதம் பேர் ‘சுமார்’ என்று பதிலளித்திருக்கின்றனர். 29.6 சதவிகிதம் பேர் மட்டுமே ‘சிறப்பு’ என்றும், 25.2 சதவிகிதம் பேர் மோசம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஒருவகையில், ‘சிறப்பு’ மற்றும் ‘சுமார்’ ஆகியவற்றைச் சேர்த்து... ‘ஆட்சி ஏதோ பரவாயில்லை’ என்று முதல்வர் தரப்பு எடுத்துக்கொண்டாலும், அடுத்த கேள்வியில் அவர் சறுக்கிவிட்டார்.

பாலிடிக்ஸ் பல்ஸ்! - ஜூ.வி மினி சர்வே

“ஸ்டாலினும் சுமார்தான்... ஆனா, தி.மு.க கூட்டணிதான் ஜெயிக்கும்!”

‘2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிதான் வெற்றி பெறும்’ என்று 47.5 சதவிகிதம் பேர் கூறியிருக்கிறார்கள். இது சரிபாதி எண்ணிக்கைக்குச் சற்றே குறைவு. சிவகங்கையைச் சேர்ந்த சிவகாமி, ‘‘எடப்பாடி ஆட்சியில எந்தப் பிரச்னையும் இல்லைங்க. ஆனா அவரை ஜெயலலிதா, கருணாநிதிக்கு அடுத்து ஒரு தலைவரா ஏத்துக்க முடியலை. மக்கள் மனசைத் தொடுற அளவுக்கு எடப்பாடி எதுவும் செய்யலை’’ என்றார்.

இதுவேதான் பெரும்பாலான வாக்காளர்களின் மனவோட்டமாக இருக்கிறது என்பதைப் பலரது பதில்களில் உணர முடிந்தது. அ.ம.மு.க பிரிந்து சென்றிருப்பதை பலவீனமாகவும் வாக்காளர்கள் நம்மிடம் சொன்னார்கள். அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டைப் பெரும்பான்மையாக 43.6 சதவிகிதம் பேர் ‘சுமார்’ என்றே சொல்லியிருக்கிறார்கள்.

பாலிடிக்ஸ் பல்ஸ்! - ஜூ.வி மினி சர்வே

“ரஜினி, வரட்டும் பார்க்கலாம்!”

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விக்குத்தான் பலரும் கோபமடைந்தனர். காரணம், அவருடைய இழுத்தடிப்பு. அவருக்கு ‘ஆதரவில்லை’ என்று பெரும்பாலானோர் சொல்லியிருந்தாலும், பலரும் ‘வரட்டும், பார்க்கலாம்’ என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம், மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர் ராமலிங்கம், ‘‘என் நண்பன், ரஜினிக்காக உயிரையேவிடுவான். இருபது வருஷத்துக்கு முன்னாடி ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னதும், அதுல சேர்ந்து கவுன்சிலரா ஆயிடுவேன்னு சொல்லிக்கிட்டிருந்தான். பத்து வருஷத்துக்கு முன்னாடி அவன் செத்தே போயிட்டான் பாவம்... இன்னமும் ரஜினி அரசியலுக்கு வந்தபாடில்லை’’ என்று வருத்தப்பட்டார்.

பாலிடிக்ஸ் பல்ஸ்! - ஜூ.வி மினி சர்வே

“பா.ஜ.க வளர்ச்சி இல்லை!”

தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்திருப்பதாக 28.3 சதவிகிதம் பேர் கூறுகின்றனர். மீதி சதவிகிதத்தினர் அந்தக் கட்சி வளர்ச்சியடையவில்லை என்று கூறியிருப்பது, பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

இன்னொரு கேள்விக்கான பதிலில், கொரோனா காலத்தில் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு ஏற்பட்டிருப்பதை அறிய முடிந்தது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியதை சர்வேயில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் வரவேற்றிருக்கிறார்கள். பன்னீருக்கு ஆதரவு வெறும் 19.6 சதவிகிதம் மட்டுமே இருந்தது.

பாலிடிக்ஸ் பல்ஸ்! - ஜூ.வி மினி சர்வே
பாலிடிக்ஸ் பல்ஸ்! - ஜூ.வி மினி சர்வே

“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது!”

‘அ.தி.மு.க-வை பா.ஜ.க இயக்குகிறதா?’, ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா?’ ஆகிய கேள்விகளுக்கு நான்கில் மூன்று பங்கு பேர் ‘ஆம்’ என்று பதிலளித்திருக்கிறார்கள். திருப்பூரைச் சேர்ந்த விவசாயி பாண்டித்துரை, ‘‘மும்மொழிக் கொள்கையைத் தவிர மத்த எந்த விஷயத்துல மத்திய அரசை எடப்பாடி அரசு எதிர்த்திருக்கு... பா.ஜ.க-வுக்கு ஆதரவாத்தானே அ.தி.மு.க செயல்படுது? ஜெயலலிதா 75 நாள் மருத்துவமனையில இருந்தாங்க. ஒருநாள்கூட அவங்க சிகிச்சை பெறும் வீடியோ, போட்டோ வரலயே. கண்டிப்பா அவங்க சாவுல மர்மம் இருக்குங்க” என்றார்.

சர்வேயின் இறுதிக் கேள்வியாக, ‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக புதிய அரசியல் மாற்றம் சாத்தியமா?’ என்று கேட்டோம். பெரும் பான்மையாக 59.2 சதவிகிதம் பேர், ‘இல்லை’ என்றே பதிலளித்திருக்கிறார்கள். தமிழக மக்களின் மனதில் இந்த இரு பெரும் கட்சிகளே இடம்பிடித்திருப்பதை சர்வே முடிவுகள் நமக்கு உணர்த்தின.

பாலிடிக்ஸ் பல்ஸ்! - ஜூ.வி மினி சர்வே

எண்கள் சதவிகிதத்தில்...

இந்த சர்வே, மக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொள்ளும் முதல் முயற்சியாகவே நடத்தப்பட்டது. சர்வேயில் கிடைத்துள்ள பதில்களை வாசகர்களிடம் சமர்ப்பித்திருக் கிறோம். இந்த மனநிலை, இன்னும் ஆறு மாதங்களுக்குள் மாறுமா அல்லது தொடருமா என்பதை அரசியல் கட்சிகளின் வியூகங்கள், கூட்டணி மாற்றங்கள், சமூகச் சூழல்கள் ஆகியவையே தீர்மானிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism