Published:Updated:

தரைமட்டமான கட்டடம்: `சென்னையில் இடிந்து விழும் நிலையில் 23,000 வீடுகள்!' -அமைச்சர் தா.மோ.அன்பரசன்

இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
News
இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கட்டடத்தில் ஏற்கனவே விரிசல் காணப்பட்டதால், அங்கு குடியிருந்தவர்களும் கவனத்துடன் இருந்திருக்கிறார்கள்.

ஆய்வு
ஆய்வு

இன்று காலை திடீரென விரிசல் அதிகமாகிக்கொண்டே போக, அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒடிவந்தனர். இதனால், வீட்டில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில், கட்டடம் சரிந்து விழுந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது. ஆனால், எந்த உயிர் இழப்பும் இல்லாமல் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கட்டடத்தின் அருகே வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என்பது விசாரித்து வருகின்றனர்.

இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

சம்பவம் நடந்த இடத்தை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய(இதன் முன்னாள் பெயர் - தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்) அமைச்சர் தா.மோ.அன்பரன் நேரில் விசிட் செய்ய வந்தார்.

அவரிடம்,

இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

``சென்னையின் பல இடங்களில் குடிசை மாற்று வாரிய வீடுகள் படு மோசமான நிலையில் இருக்கின்றனவே?”

``திருவொற்றியூரில் இடிந்த கட்டடம் 1993-ல் கட்டப்பட்டவை. அங்கே மோசமான நிலையில் உள்ள வீடுகளை சரிசெய்ய ஒரு கோடியே 27 லட்ச ரூபாய் பணத்தை ஒதுக்கி இருக்கிறோம். இதேபோல, சென்னையின் மற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்துவிட்டோம். அரசு சார்பில் தரக்கட்டுப்பாட்டு பிரிவு நிபுணர்களை அனுப்பி மோசமான நிலையில் உள்ள வீடுகளை பற்றி ரிப்போர்ட் வாங்கினோம். மொத்தமுள்ள வீடுகளில் இடிக்கவேண்டிய சூழ்நிலையில் உள்ள வீடுகள் சுமார் 23 ஆயிரம். இந்த வீடுகள் 40, 50 வருடங்களுக்கு முன்பு கட்டபட்டவை. அதனால், கட்டடத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

``அதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டீர்களா?”

``ஆமாம்! முதல்கட்டமாக 7500 வீடுகளை 2,500 கோடி ரூபாய் செலவில் கட்டத்தரப்போகிறோம். அதன் ஒரு கட்டமாக, கோட்டூர்புரத்தில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் மோசமான நிலையில் இருந்த வீடுகளில் வசித்து வந்தவர்களை காலி பண்ணிதரச் சொல்லியிருக்கறோம். அவர்களும் காலி பண்ண ஆரம்பித்துவிட்டனர். புது வீடு கட்டித்தரும் வரையில் வேறு இடங்களுக்கு இடம்பெயர்களுக்கு உதவித்தொகையாக கடந்த அரசு தரப்பில் 8 ஆயிரம் ரூபாய் வழங்கியது. அதை தற்போது 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தருகிறோம். மேலும் பல சலுகைகளை அரசு அளித்து வருகிறது.

அரவாக்குளத்தில் நடந்த விபத்து பற்றி இப்போதுதான் ஆய்வு செய்யப்போகிறோன். முழுவதுமாக பார்த்துவிட்டு, பிறகு பேசுகிறேன்''