Published:Updated:

தஞ்சை விபத்து: `திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சியினருமே இணைந்து பணியாற்றினார்கள்' -அன்பில் மகேஸ்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

`முதன்முறையாக தஞ்சையில் மாணவனின் சடலத்துக்கு மாலை சூட்டினேன். மின்சாரம் தாக்கி இறந்த 11 பேரில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவரும் ஒருவர்.' - அமைச்சர் அன்பில் மகேஸ்.

தஞ்சை விபத்து: `திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சியினருமே இணைந்து பணியாற்றினார்கள்' -அன்பில் மகேஸ்

`முதன்முறையாக தஞ்சையில் மாணவனின் சடலத்துக்கு மாலை சூட்டினேன். மின்சாரம் தாக்கி இறந்த 11 பேரில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவரும் ஒருவர்.' - அமைச்சர் அன்பில் மகேஸ்.

Published:Updated:
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு அப்பர் கோயில் தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், தஞ்சை களிமேடு விபத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவையில் உருக்கமாகப் பேசினார். ``11 மாதங்களாக பல்வேறு பள்ளி நிகழ்வுகளில் பல மாலைகளை மாணவர்களுக்குச் சூட்டியிருக்கிறேன். ஆனால் முதன்முறையாக தஞ்சையில் ஒரு மாணவனின் சடலத்துக்கு மாலை சூட்டினேன். மின்சாரம் தாக்கி இறந்த 11 பேரில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவரும் ஒருவர். `இந்த விவகாரத்தை அரசியலாகப் பார்க்க வேண்டாம்’ என முதலமைச்சர் கூறியிருந்தார்.

விபத்து
விபத்து

அந்த ஊராட்சி மன்றத்தின் தலைவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். ஒன்றியக்குழு கவுன்சிலர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர். அங்கு இருக்கின்ற மாவட்ட கவுன்சிலர் தி.மு.க-வைச் சேர்ந்தவர். இவர்கள் மூன்று பேரும் இணைந்து பணியாற்றினார்கள். முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறும் `நமது ஆட்சி' ஃபீல்டில் (களத்தில்) பிரதிபலிக்கிறது. அதுபோல இந்தச் சட்டமன்றத்திலும் பிரதிபலிக்க வேண்டும். தஞ்சை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற மருத்துவமனைக்கு வந்தால் போதும் என்று முதல்வரிடம் கூறினேன். ஆனால் `உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறினால்தான், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியும்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்" என்றார்.

இதைத் தொடர்ந்து, ``தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் மின் இணைப்பு புதைவடமாக மாற்றப்படும். திருவாரூர் உள்ளிட்ட மூன்று கோயில்களின் தேரோடும் வீதிகளில் உள்ள மின் இணைப்புகளை புதைவிடமாக மாற்றும் பணி நடக்கிறது' என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism