Published:Updated:

``விவசாயியை நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது!" - கே.என்.நேருவைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் வருத்தம்

அன்பில் மகேஷ்
News
அன்பில் மகேஷ்

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த அமைச்சர் அன்பில் மகேஷ், ``ஏய்... அங்குட்டு போய்யா!" என ஒருமையில் அந்த விவசாயியைத் திட்டினார்

கடந்த வாரம் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாகக் கேட்ட கேள்விக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசனை ஒருமையில் பேசினார். பொதுவெளியில், கூட்டணிக்கட்சியின் எம்.பி ஒருவரை அமைச்சர் ஒருமையில் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கே.என்.நேரு ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, அவரின் பேச்சுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

அதையடுத்து, அமைச்சர் நேரு தன் ட்விட்டர் பக்கத்தில், `நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனிமேல் அவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழக அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள், அடுத்த சில தினங்களில் மீண்டும் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ், விவசாயி ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி சர்ச்சையில் சிக்கினார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் பகுதியில் வயல்வெளிகளில் தொடர்மழையின் காரணமாகச் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

அதனால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ், அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுடன் அவர் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ``வெள்ள பாதிப்புகளை வயல்வெளியில் இறங்கிப் பாருங்கள்" என்று கூறினார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த அமைச்சர் அன்பில் மகேஷ், ``ஏய்... அங்குட்டு போய்யா!" என ஒருமையில் அந்த விவசாயியைத் திட்டினார். பதிலுக்கு அந்த விவசாயி, ``நானும் விவசாயிதான்" என்று கூறினார். அதனால், மேலும் ஆத்திரமடைந்த அமைச்சர் அந்த விவசாயியைச் சிறிது நேரம் முறைத்தபடி நின்றார்.

விவசாயியை ஒருமையில் திட்டிய அன்பில் மகேஷ்
விவசாயியை ஒருமையில் திட்டிய அன்பில் மகேஷ்

அமைச்சர் விவசாயியைத் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷிடம், இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ``நான் மக்களிடமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் தன்னுடைய வயலைத் தனியாக வந்து பாருங்கள் என்று கூறிக்கொண்டேயிருந்தார். அந்த நேரத்தில் நான் அவ்வாறு பேசினேன் என்பது வருந்தத்தக்கது. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அந்த விவசாயியின் நிலம் ஐந்து ஏக்கர் உட்பட 80 ஏக்கர் வயல்வெளி பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் பெற்றுத் தரவேண்டியது அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய கடமை" என்றார்.