Published:Updated:

`முதல்வர் கேட்பார்... கொரோனா விழிப்பு உணர்வு கூட்டம் எனக் கூறித் தப்பித்துவிடுவேன்!' - அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்
News
அமைச்சர் அன்பில் மகேஷ்

``கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியிருப்பதால், இந்தக் கூட்டத்தை கொரோனா விழிப்பு உணர்வு கூட்டமாக நடத்தியதாகக் கூறி, முதல்வரிடம் நான் தப்பித்துக்கொள்வேன்" என்றார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டபத் திறப்புவிழா ஒன்றில் தமிழகக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசுத் தலைமை கொறடா கோ.வி.செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். இந்த விழாவில், தி.மு.க-வினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அரசுத் தலைமை கொறடா கோ.வி.செழியன், ``விழா ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை தி.மு.க மாநாடுபோல ஏற்பாடு செய்திருக்கிறார்கள்" என்றார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ``தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்கக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில், நான் இவ்வளவு பேர் கூடியிருக்கும் கூட்டத்தில் பங்கேற்றது குறித்து முதல்வர் நிச்சயமாகக் கேள்வி கேட்பார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியிருப்பதால், மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் இந்தக் கூட்டத்தை கொரோனா விழிப்புஉணர்வுக் கூட்டமாக நடத்தியதாகக் கூறி முதல்வரிடம் நான் தப்பித்துக்கொள்வேன்.

ஆனால் இந்தக் கூட்டம் மாநாடு போன்று நடப்பதாகக் கூறிய தலைமை கொறடாதான் தமிழக முதல்வருக்கு பதில் சொல்லியாக வேண்டும்" என்று தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது குறித்து நகைச்சுவையாகச் சமாளித்துப் பேசினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz