Published:Updated:

``நீட் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது!" - அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

`நீட் தேர்வு தொடர்பாகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை மதவாத சக்திகளுக்குப் பயந்து கொண்டு அ.தி.மு.க புறக்கணித்திருப்பதாகத் தெரியவருகிறது.' - அன்பில் மகேஷ்

``நீட் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது!" - அன்பில் மகேஷ்

`நீட் தேர்வு தொடர்பாகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை மதவாத சக்திகளுக்குப் பயந்து கொண்டு அ.தி.மு.க புறக்கணித்திருப்பதாகத் தெரியவருகிறது.' - அன்பில் மகேஷ்

Published:Updated:
அன்பில் மகேஷ்

``அ.தி.மு.க ஆட்சியில் அவர்கள் செய்த ஊழல்களைச் சுட்டிக்காட்டி வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியமில்லை. நீட் தேர்வு என்கிற ஒன்று போதும். அ.தி.மு.க-வினர் யாருக்கோ பயந்துகொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்து நம்முடைய பிள்ளைகளுக்குத் துரோகம் செய்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவிகிதம் வெற்றி பெறுவோம்" எனத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் அன்பில் மகேஷ்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட மலைக்கோட்டை, மார்க்கெட், பொன்மலை, ஏர்போர்ட் ஆகிய வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்துப் பேசினார் தெற்கு மாவட்டச்செயலாளர் அன்பில் மகேஷ். அவர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் தி.மு.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு அரசு செய்த திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்க வேண்டியது எங்களது கடமை. நாங்கள் அதனைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறோம். அதேபோல் பிப்.19-ம் தேதி நீங்கள் தி.மு.க-வில் வாக்களிப்பது உங்களது கடமை. மக்களாகிய நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால் மட்டுமே நல்லத் திட்டங்கள் உங்களை வந்துசேரும்.

நிர்வாகிகள்
நிர்வாகிகள்

கொரோனா விவகாரம் முதல் வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் முதல்வரின் ஆட்சியைப் பார்த்து எதிர்க்கட்சியினரே மிரண்டு போய் இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவிகிதம் வெற்றி பெறவேண்டும். எதிர்க்கட்சியைத் திட்டியோ அவர்கள் ஆட்சியில் செய்த ஊழல்களைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டிய அவசியமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீட் தேர்வால் ஏராளமான பள்ளி மாணவ,மாணவிகளை இழந்திருக்கிறோம். நீட் தேர்வு தொடர்பாகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை மதவாத சக்திகளுக்குப் பயந்து கொண்டு அ.தி.மு.க புறக்கணித்திருப்பதாகத் தெரியவருகிறது. இப்போதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள் யார் நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்று.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இப்படிப்பட்ட எதிர்க்கட்சிக்கு மீண்டும் பாடம் புகட்டும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க-வினர் வெற்றி பெறவேண்டும். திருச்சியில் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று முதல்வரிடம் நாம் தெரிவிக்கவேண்டும். நமக்கும் எந்தவித மனக்கசப்புகள் இருந்தாலும் அவற்றை புறம் தள்ளிவிட்டு வெற்றிக்காக மட்டுமே உழைக்கவேண்டும். நம்முடைய வெற்றி வேட்பாளர்களை முதல்வர் முன்னிறுத்த வேண்டும்" என்று நிர்வாகிகளுக்கு தெம்பூட்டும் விதமாகப் பேசி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism