Published:Updated:

அமைச்சர் அன்பில் மகேஸ் பல்டிகள்!

அமைச்சர் அன்பில் மகேஸ்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் அன்பில் மகேஸ்

இந்த முறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிசம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்தப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது

அமைச்சர் அன்பில் மகேஸ் பல்டிகள்!

இந்த முறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிசம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்தப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது

Published:Updated:
அமைச்சர் அன்பில் மகேஸ்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் அன்பில் மகேஸ்

தி.மு.க அமைச்சரவையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொறுப்பேற்றதிலிருந்தே விழாக்கள், அறிக்கைகள், நிகழ்ச்சிகள், பேட்டிகள், கருத்துகள் எனத் தன்னை மிகப் பரபரப்பான ஓர் அமைச்சராகவே காட்டிவருகிறார். ‘அதைக் குறைசொல்வதற்கில்லை. ஆனால், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதில் அவர் கொண்டிருக்கும் அக்கறையில், பாதியாவது 60 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைக்கொண்டிருக்கும் அவரது துறையின்மீது வேண்டாமா?’ என்று விமர்சிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். நாளொரு கருத்து, பொழுதொரு குழப்பமான அறிவிப்பு என வெளியிடுகிறார். அதில், சர்ச்சை எழுந்தால் தன் முடிவுகளிலிருந்து உடனே பல்டி அடிக்கிறார். அப்படி, சமீபகாலமாகப் பள்ளிக்கல்வித்துறையில் அரங்கேறிய குழப்பங்களும் அன்பில் அடித்த பல்டிகளும்..!

அமைச்சர் அன்பில் மகேஸ் பல்டிகள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய நல்ல திட்டங்களை எடுத்துக்கொண்டு, அவற்றைத் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கைக்கு பாதிப்பில்லாமல் செயல்படுத்தலாம்” என்று பேசினார். அடுத்த சில நாள்களில், தமிழ்நாட்டுக்குத் தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படவிருப்பதால், தேசியக் கல்விக் கொள்கை அவசியமில்லை” என்றார்!

வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அரையாண்டு விடுமுறை 10 நாள்கள் விடப்படும். ஆனால், ‘இந்த முறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிசம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்தப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், அன்பில் மகேஸ் ‘அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை விடப்படும்’ என்று அறிவித்தார். இதனால், 2021, டிசம்பர் மாதம் நடக்கவிருந்த திருப்புதல் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, 2022 பிப்ரவரியில் நடத்தப்பட்டது!

அமைச்சர் அன்பில் மகேஸ் பல்டிகள்!

‘பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 13-ம் தேதி திறக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், மே 18-ம் தேதி பேட்டி கொடுத்த அன்பில் மகேஸ், “ஆசிரியர்களுக்குப் பயிற்சி உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம். ஜூன் 20-ம் தேதி திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது ஒரு வாரம் முன்னராகவோ பின்னராகவோ இருக்கலாம்” என்றார். ஆனால், அதிகாரிகளிடம் கேட்டபோது, “திட்டமிட்டபடி ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என்றனர். அதேபோல், 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

“2022-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டைப்போலவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். தள்ளிப்போக வாய்ப்பே இல்லை” என்றார் அன்பில். ஆனால், பொதுத்தேர்வு நடைபெற்றதோ மே மாதத்தில்!

அமைச்சர் அன்பில் மகேஸ் பல்டிகள்!

‘பொதுத்தேர்வின்போது மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அன்பிலோ, “மாணவர்கள் தேர்வு எழுத வந்தால் மட்டும் போதும்” என்று அறிவித்தார்!

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டதால், ‘1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தேர்வு இல்லை’ என்று தகவல் வெளியானது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை. பின்பு, ‘1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தேர்வின்றி தேர்ச்சி என்ற தகவல் தவறானது. அப்படியெல்லாம் ஆல் பாஸ் செய்யப்படாது’ என்று அன்பில் அறிவித்தார். ஆனால், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்!

அமைச்சர் அன்பில் மகேஸ் பல்டிகள்!

‘10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், கிட்டத்தட்ட 6.7 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்குச் சிறப்புத் தேர்வு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என அன்பில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஆனால், 1.08 லட்சம் மாணவர்கள்தான் பொதுத்தேர்வை எழுதவில்லை என்கிறது அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் புள்ளிவிவரம்!

12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கேள்வித்தாள்கள், சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. ‘அந்த மேல்நிலைப் பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் செல்லவிருக்கிறேன்’ என்று சென்னை எழும்பூரில் காலையில் பேட்டி கொடுத்து அசத்தினார் அன்பில்!

அமைச்சர் அன்பில் மகேஸ் பல்டிகள்!
அமைச்சர் அன்பில் மகேஸ் பல்டிகள்!

அரசுப் பள்ளிகளில் இயங்கும் 2,381 எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளை நிறுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்தது. அதன்படி, அங்கிருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைக் கல்வித்துறை திரும்பப்பெற்றது. “பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். இதில், பணியாற்றிய ஆசிரியர்கள், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுவார்கள்” என்றார் அன்பில். அதற்குக் கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, “பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் அறிவுரையின்படி, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்” என்று அறிக்கை வெளியிட்டு அந்தர் பல்டி அடித்தார் அன்பில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism