Published:Updated:

எடப்பாடி வியூகத்துக்கு வேட்டு வைக்கிறாரா அமைச்சர் பாஸ்கரன்? - விஜயகாந்த் குறித்த பேச்சால் சர்ச்சை

`விஜயகாந்த் அரசியலுக்கு வந்து என்ன சாதித்துவிட்டார். இனி அரசியலுக்கு நடிகர் வந்தால் ஒன்றும் சாதிக்க முடியாது' என்று அமைச்சர் பாஸ்கரன் பேசியிருப்பது அ.தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த காணாடுகாத்தானில் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் 1,034 மாணவர்களுக்கு ஒரு கோடியே 33,000 மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் நேற்று வழங்கினார்.

அமைச்சர் ஜி.பாஸ்கரன்
அமைச்சர் ஜி.பாஸ்கரன்

இந்த நிலையில், இன்று சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பாக கால்நடைகளுக்கான நடமாடும் அவசர ஊர்தியை அமைச்சர் பாஸ்கரன் துவக்கிவைத்தார்.

ஜி.பாஸ்கரன்
ஜி.பாஸ்கரன்

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் பாஸ்கரன்,``சிவகங்கையில் பாதாளத் திட்டப்பணிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னர் நிறைவுபெறும். விஜயகாந்த் அரசியலுக்கு வந்து என்ன சாதித்தார்? எனவே, அரசியலுக்கு நடிகர்கள் வந்தால் ஒன்றும் சாதிக்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`செல்போனைக் கண்டுபிடித்தவனைப் பார்த்தால்....?!' - அமைச்சர் பாஸ்கரன் பேச்சால் சிரிப்பலை

காரைக்குடியை தலைமையகமாகக் கொண்டு சிவகங்கை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் அரசுக்குத் துளியும் இல்லை'' என்றார்.

ஜி.பாஸ்கரன்
ஜி.பாஸ்கரன்

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க-வின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பற்றி அமைச்சர் பேசியிருப்பது அ.தி.மு.க கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவாக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துவருகிறார். இந்தநிலையில், அமைச்சர் பாஸ்கரனின் விஜயகாந்த் குறித்த பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு