Published:Updated:

`தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைராசிக்காரர்; முகராசிக்காரர்!’ - அமைச்சர் துரைக்கண்ணு

அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு

`ராசியான முதல்வர் என்பதால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விரைவில் 100 அடியை எட்டும்' என அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

``தமிழக முதல்வர் கைராசிக்காரர், முகராசிக்காரர் என்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ராசியான முதல்வர் என்பதால் தமிழகத்தில் வறட்சி என்பதே இல்லை'' என கும்பகோணத்தில் அமைச்சர் துரைக்கண்ணு பேசினார்.

அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு

கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சியில் அ.தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண்ந்த்துறை அமைச்சர் துரைக்கண்ணு இதில் கலந்துகொண்டு, நிவாரண உதவிப் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், ``இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் தமிழகத்தில் ரூ.8,225 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுத் தந்துள்ளார்.

எஸ்.வி.சேகர் vs எடப்பாடி பழனிசாமி... முதல்வரின் பதில் பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

ஒரே நேரத்தில் எல்லா விவசாயிகளுக்கும் இழப்பீடு பணம் வழங்குவது என்பது முடியாத காரியம். எனவே, வருவாய்த்துறை, வேளாண்மைதுறை, காப்பீடு நிறுவனம் ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து பகுதி பகுதியாகக் கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு விவசாயிக்கும் பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பில்லை. இதுவரை, இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிகமாக பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். இதில், அவர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.

மேட்டூர் அணை நிரம்பியதால் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்தோம். அதன் பிறகு நீர் மட்டம் குறைந்தது. தமிழக முதல்வர் ராசியானவர். `தொட்டது துலங்கும்; பட்டது விளங்கும்’ என்பார்கள். அதற்கு ஏற்றாற்போல் ராசியான முதல்வர் என்பதால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதுடன், நீர் மட்டமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. விரைவிலேயே நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும்.

அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைராசிக்காரர், முகராசிக்காரர். எனவே, தமிழகத்தில் வறட்சி என்பதே கிடையாது. தண்ணீர் தட்டுப்பாடு என்பதும் இருக்காது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு