Published:Updated:

``அதிமுக-வின் கே.பி.முனுசாமிக்கு டெண்டர் விடப்பட்டதா?" - செய்தியாளர்களிடம் விளக்கமளித்த துரைமுருகன்

துரைமுருகன்

பொன்னையன் சமீபத்தில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம், ``கே.பி.முனுசாமி ஆளும் தி.மு.க அரசின் துரைமுருகன் போன்ற அமைச்சர்களின் உதவியால் பல குவாரி டெண்டர்களை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்" என்று பேசியதாகக் கூறப்படுகிறது.

``அதிமுக-வின் கே.பி.முனுசாமிக்கு டெண்டர் விடப்பட்டதா?" - செய்தியாளர்களிடம் விளக்கமளித்த துரைமுருகன்

பொன்னையன் சமீபத்தில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம், ``கே.பி.முனுசாமி ஆளும் தி.மு.க அரசின் துரைமுருகன் போன்ற அமைச்சர்களின் உதவியால் பல குவாரி டெண்டர்களை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்" என்று பேசியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
துரைமுருகன்

அ.தி.மு.க-வில் கடந்த ஒரு மாதகாலமாகவே கலகங்களும், சண்டை சச்சரவுகளும் நடந்தேறி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில், கடந்த திங்கள்கிழமை நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

2017-ம் ஆண்டு ஓ.பி.எஸ் நடத்திய தர்ம யுத்தத்தில் அவருக்கு பெரும் பக்கபலமாக இருந்தவர்தான் கே.பி.முனுசாமி. ஆனால் தற்போது அவர் அணி மாறி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார். மேலும் அவர் ஓ.பி.எஸ்ஸை கடுமையாகத் தாக்கிப் பேசியும் வருகிறார்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

நடந்து முடிந்த பொதுக்குழுவில், ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கே.பி.முனுசாமி பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், நேற்று கே.பி.முனுசாமிக்கு அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் பொன்னையன் சமீபத்தில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம், ``கே.பி.முனுசாமி ஆளும் தி.மு.க அரசின் துரைமுருகன் போன்ற அமைச்சர்களின் உதவியால் பல குவாரி டெண்டர்களை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்" என்று பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பொன்னையன் தான் அப்படி பேசவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்தார். இருப்பினும், இந்த விவகாரம் அ.தி.மு.க-வை தாண்டி தி.மு.க வட்டத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

திமுக
திமுக

இந்த நிலையில், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்திருந்த அமைச்சர் துரைமுருகனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துக்கொண்டே, ``பைத்தியக்கார பய பொன்னையன். கே.பி.முனுசாமியின் குவாரிக்கு நாங்கள் ஏற்கெனவே சீல் வைத்திருக்கிறோம். சென்ற மாதம் நடந்த 20 குவாரிகளுக்கான டெண்டரில், ஒன்றை அதிக விலை கொடுத்து எடுத்திருக்கிறார்" என்று பதிலளித்தார்.

மேலும், ஊழல் குற்றசாட்டு உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தி.மு.க-வை அணுகி வருவதாகவும் அவர்களுக்கு தி.மு.க அனுகூலமாக இருக்கிறது என்ற குற்றசாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பியபோது, ``அப்படியெல்லாம் இல்லை...!" என்று மறுத்தார் துரைமுருகன்.