Published:Updated:

``திமுக இல்லையென்றால் தமிழ்நாடு மீண்டும் காட்டுமிராண்டிகளின் வசம் போய்விடும்..!” - துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன்

``மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இந்தியை எப்படியாவது நாடு முழுவதும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.'' - அமைச்சர் துரைமுருகன்

``திமுக இல்லையென்றால் தமிழ்நாடு மீண்டும் காட்டுமிராண்டிகளின் வசம் போய்விடும்..!” - துரைமுருகன்

``மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இந்தியை எப்படியாவது நாடு முழுவதும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.'' - அமைச்சர் துரைமுருகன்

Published:Updated:
அமைச்சர் துரைமுருகன்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தி.மு.க சார்பில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

அப்போது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ``தி.மு.க என்ற இந்த இயக்கத்துக்கு இந்தி மொழி எதிர்ப்பே மாபெரும் அடையாளத்தைக் கொடுத்தது. தி.மு.க-வைச் சேர்ந்த பலர் உயிர்த் தியாகம் செய்து இந்தித் திணிப்பை தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்திருக்கிறார்கள். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இந்தியை எப்படியாவது நாடு முழுவதும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

நாட்டுக்காக வாழ்வைத் தியாகம் செய்த மகாத்மா காந்தியையும், ஜவஹர்லால் நேருவையும் இருட்டடிப்பு செய்து சாவர்க்கரையும், பட்டேலையும் முன்னிறுத்திவருகின்றனர். அதுவரை குறிப்பிட்ட சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே இருந்த அதிகார நாற்காலிகளை, சாமானியர்கள் வசம் பெற்றுக்கொடுத்தது திமுக-தான். தமிழ்நாட்டில் தி.மு.க மட்டும் இல்லையென்றால் இந்த மாநிலம் மீண்டும் காட்டுமிராண்டிகளின் வசம் போய்விடும். எனவே, மக்கள் இதை உணர வேண்டும்" என்றார்.