Published:Updated:

`டெல்லி போயிருந்தேன்; மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற சபாநாயகரும் மயங்கிப் போனார்கள்’ - துரைமுருகன்

துரைமுருகன்

``காட்பாடியில் எனக்கு சில நேரங்களில் வாக்குகளைக் கொட்டியிருக்கிறீர்கள். சில நேரங்களில் எண்ணிப் போட்டியிருக்கிறீர்கள். நீங்கள் எண்ணிப் போட்டாலும், வாக்குகளைக் கொட்டிப் போட்டாலும் இறுதியில் வெற்றிபெறவது என்னமோ நானாகத்தான் இருக்கிறேன்’’ - துரைமுருகன்.

`டெல்லி போயிருந்தேன்; மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற சபாநாயகரும் மயங்கிப் போனார்கள்’ - துரைமுருகன்

``காட்பாடியில் எனக்கு சில நேரங்களில் வாக்குகளைக் கொட்டியிருக்கிறீர்கள். சில நேரங்களில் எண்ணிப் போட்டியிருக்கிறீர்கள். நீங்கள் எண்ணிப் போட்டாலும், வாக்குகளைக் கொட்டிப் போட்டாலும் இறுதியில் வெற்றிபெறவது என்னமோ நானாகத்தான் இருக்கிறேன்’’ - துரைமுருகன்.

Published:Updated:
துரைமுருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட சுகர்மில் பகுதயில், மாற்றுக்கட்சியினர் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்தக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘``எனக்கு, நீங்கள் நீண்ட நெடுங்காலம் வாக்களித்திருக்கிறீர்கள். இந்தியாவிலேயே சட்டசபையில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்தவர் கலைஞர். அவர் 56 வருடங்கள் தமிழ்நாடு சட்டசபையில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு அடுத்து, உங்களுடைய தயவால், உங்களுடைய ஆதரவால், உங்களுடைய உழைப்பால் 53 ஆண்டுகள் சட்டசபையில் இருப்பவன் இந்த துரைமுருகன்தான். இது, சாதாரணமானது அல்ல. கொஞ்ச நாளைக்கு முன்னால் நான் டெல்லிப் போயிருந்தேன். அங்கே பல அமைச்சர்களையும், நாடாளுமன்ற சபாநாயகரையும் சந்தித்தேன்.

ஸ்டாலினுடன் துரைமுருகன்
ஸ்டாலினுடன் துரைமுருகன்

‘நீங்கள் எத்தனை வருஷமாக எம்.எல்.ஏ-வாக இருக்கிறீர்கள்?’ என்று அவர்கள் கேட்டார்கள். ‘53 வருஷம்’ என்று சொன்னபோது, ‘இப்படி ஒருவர் இருக்க முடியுமா?’ என்று நினைத்து அவர்கள் மயங்கிப் போனார்கள். எனக்கு அடுத்து, கேரளத்தில் இருக்கும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ தான் சட்டசபையில் 52 வருடங்களாக உறுப்பினராக இருக்கிறார். காட்பாடி தொகுதியில் எனக்கு சில நேரங்களில் வாக்குகளைக் கொட்டியிருக்கிறீர்கள். சில நேரங்களில் எண்ணிப் போட்டியிருக்கிறீர்கள். நீங்கள் எண்ணிப் போட்டாலும், வாக்குகளைக் கொட்டிப் போட்டாலும் இறுதியில் வெற்றிபெறவது என்னமோ நானாகத்தான் இருக்கிறேன். ‘நானாக இருக்கிறேன்’ என்பது திமிர் ஆகிவிடும். என்னை நீங்கள்தான் உருவாக்கியிருக்கிறீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு காலத்தில் காட்பாடிக்குப் பாலாற்றுத் தண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாது. அதை கொண்டுவந்து கொடுத்தவன் நான். இன்றைக்கு காவிரி தண்ணியையும் கொண்டுவந்து கொடுத்திருக்கிறேன். இதே ஊரில் இருக்கிற சுகர் மில் என்னால் உருவாக்கப்பட்டவைதான். இதற்கான இடத்தை எடுக்கும்போது, நம்முடைய பெரியவர் நாட்டு கந்தசாமி உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்குப் போட்டார். பிறகு நான் அவரைப் போய் பார்த்து, கையைப் பிடித்து, காலைப் பிடித்து நிலத்தை வாங்கியதால்தான் இன்றைக்கு இந்த மில் ஓடிக்கொண்டிருக்கிறது.

துரைமுருகன்
துரைமுருகன்

சில பேர் வந்தால் மில் நன்றாக நடக்கிறது. சில நேரங்களில் சில பேரால் நொண்டுகிறது. அதிமுக ஆட்சியில், இட்டதே சட்டம் என்று சுகர் மில்லை நடத்திக்கொண்டிருந்தார்கள். விசாரணை கமிஷன் கொண்டுவந்து, யார்... யார் தப்பு செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, அவர்களைக் கொஞ்ச காலம் சிறைக்கு அனுப்பலாம். அப்பதான் இந்த மில் திருந்தும் என்பதை எச்சரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு இருக்கிற ஆயிரம் வேலைகளில், சில நேரங்களில் என்னால் பார்க்கமுடிவதில்லை. ஆனாலும், இந்த மில் இப்போது சக அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வத்தின் ஆளுகைக்குள் வந்திருக்கிறது. விரைவில், சட்டமன்றம் முடிந்தப் பின் அவரும் நானும் இங்குவந்து, துப்பறிந்து நிச்சயம் வழக்குப் போடுவோம். சுகர்மில்லில் இப்போது இருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த 5 ஆண்டில் காட்பாடியை முழு நிறைவுபெற்ற தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்’’ என்றார் துரைமுருகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism