Published:Updated:

``கருணாநிதி சிலை அமையும் இடத்துக்குப் பட்டா வழங்கியதே ஜெயலலிதா அரசாங்கம்தான்!" - அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு

‘‘கருணாநிதி சிலை அமைக்கத் தேர்வுசெய்யப்பட்ட இடம், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமானது. 2001-ல் ஜெயலலிதா அரசாங்கம்தான் பட்டா வழங்கியது. 21 ஆண்டுகள் ராஜேந்திரனின் பராமரிப்பிலிருந்த நிலத்தை தி.மு.க வாங்கியிருக்கிறது’’ என்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

``கருணாநிதி சிலை அமையும் இடத்துக்குப் பட்டா வழங்கியதே ஜெயலலிதா அரசாங்கம்தான்!" - அமைச்சர் எ.வ.வேலு

‘‘கருணாநிதி சிலை அமைக்கத் தேர்வுசெய்யப்பட்ட இடம், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமானது. 2001-ல் ஜெயலலிதா அரசாங்கம்தான் பட்டா வழங்கியது. 21 ஆண்டுகள் ராஜேந்திரனின் பராமரிப்பிலிருந்த நிலத்தை தி.மு.க வாங்கியிருக்கிறது’’ என்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

Published:Updated:
அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படுவதற்குத் தடை கோரி, கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ``தி.மு.க-வினர் பொது இடத்தை ஆக்கிரமித்து சிலைவைக்க முயல்கின்றனர். கிரிவலப் பாதை மற்றும் நெடுஞ்சாலைச் சந்திப்பில் சிலை வைக்கப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வுசெய்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதுவரை சிலை அமைக்கும் இடத்தில், தற்போதுள்ள நிலையையே நீட்டிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருணாநிதி சிலை
கருணாநிதி சிலை

இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யாமல் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும், அதுவரை குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்கவும் இடைக்கால தடைவிதித்து, வழக்கை ஒத்திவைத்தனர். மேலும், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சரின் மகன் நடத்திவரும் ஜீவா கல்வி அறக்கட்டளை ஆகியோர் தரப்பிலும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் பேசினோம். ``தலைவரின் சிலையை அமைக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கவில்லை. ஏற்கெனவே, என்ன நிலையிலிருக்கிறதோ, அதையே பின்பற்ற வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறது. சிலை நிறுவப்படவிருக்கும் இடம் கட்டாந்தரையாகத்தான் கிடக்கிறது. வழக்கு தொடர்ந்த நபர் வேளச்சேரியைச் சேர்ந்தவர் என்கிறார்கள். பொது இடம், நீர்நிலை என அவர் பொய் சொல்லியிருக்கிறார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

சிலை அமைக்க தேர்வுசெய்யப்பட்ட இடம் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமானது. அவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். 210 சதுர அடிகொண்ட அந்த நிலத்துக்கு 2001-ல் ஜெயலலிதா அரசாங்கம்தான் பட்டா வழங்கியது. 21 ஆண்டுகள் ராஜேந்திரனின் பராமரிப்பிலிருந்த நிலத்தை திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க வாங்கியிருக்கிறது. அது, கிரய இடம். நீர்நிலைப் புறம்போக்கோ, பாதைப் புறம்போக்கோ, சுடுகாட்டு புறம்போக்கு நிலமோ கிடையாது. தரிசு நிலம். மாவட்ட தி.மு.க வாங்கி ஆறு மாதங்கள் ஆகின்றன. ‘சிலைகளைப் பொது இடத்தில் வைக்கக் கூடாது. சொந்த இடத்தில் வேண்டுமானால் வைத்துகொள்ளலாம்’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே சிலையை நிறுவ முடிவெடுத்தோம். அதுமட்டுமின்றி, சிலை வைக்கப்படும் இடம் கிரிவலப் பாதைக்கு அருகில் இல்லை. திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, கிரிவலம் செல்லும் பக்தர்களின் மனம் எப்படிப் புண்படும்.... வழக்கு தொடர்ந்த நபர் கதை விடுகிறார். நீதிமன்றத்தின் முடிவை வைத்து, சிலை அமைப்பது தொடர்பாக நாங்கள் முடிவெடுப்போம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism