Published:Updated:

`செல்போனைக் கண்டுபிடித்தவனைப் பார்த்தால்....?!' - அமைச்சர் பாஸ்கரன் பேச்சால் சிரிப்பலை

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

அமைச்சர் ஜி.பாஸ்கரன்
அமைச்சர் ஜி.பாஸ்கரன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த காணாடுகாத்தானில் உள்ள அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் 1034 மாணவர்களுக்கு 1.033 லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி
அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி

இந்த அரசு விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், சிவகங்கை முன்னாள் எம்.பி செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் பேசுகையில்,``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். குறிப்பாக, பெண்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை வகுத்தார். இப்படியான முக்கியத் திட்டத்தில் விலையில்லா மடிக்கணினி திட்டமும் ஒன்று. இதனால் பல ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற்றுவருகின்றனர்.

ஜி.பாஸ்கரன்
ஜி.பாஸ்கரன்

தற்போதெல்லாம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் தனித்தனியாக செல்போனைப் பயன்படுத்தியபடி சுத்துகின்றனர். இதனால் படிப்பின் மீது ஆர்வம் அவர்களுக்குக் குறைகிறது. இதைப் பார்க்கும் போது செல்போன் கண்டுபிடித்தவனைப் பார்த்தால் மிதிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

செல்போன் கண்டுபிடித்தவன் நல்லதுக்காக கண்டுபிடித்திருப்பான். ஆனால், இதை இளைஞர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அதைப்போல் இல்லாமல் மாணவர்கள் லேப்டாப்பைப் படிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்'' என்று பேசினார்.

லேப்டாப்
லேப்டாப்

அமைச்சர் பேசியது அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.