Published:Updated:

``இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு காக்கும் முயற்சியில் இருக்கிறோம்!" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர்கள் ஆய்வு

இலங்கையிலிருந்து வரும் தமிழர்களை 'இங்கு வாருங்கள்' என நாங்கள் அழைக்கவில்லை. சூழ்நிலை காரணமாக அவர்கள் அங்கிருந்து வருகிறார்கள். அவர்களை தாயுள்ளத்தோடு பாதுகாப்பது, தங்க வைப்பது, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது என முயற்சியில் உள்ளோம்.

``இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு காக்கும் முயற்சியில் இருக்கிறோம்!" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

இலங்கையிலிருந்து வரும் தமிழர்களை 'இங்கு வாருங்கள்' என நாங்கள் அழைக்கவில்லை. சூழ்நிலை காரணமாக அவர்கள் அங்கிருந்து வருகிறார்கள். அவர்களை தாயுள்ளத்தோடு பாதுகாப்பது, தங்க வைப்பது, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது என முயற்சியில் உள்ளோம்.

Published:Updated:
அமைச்சர்கள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து ஊராட்சியில் இலங்கை அகதிகள் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், ``இலங்கைத் தமிழர்கள் குடியிருப்பு அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்ததன் அடிப்படையில் 321 வீடுகள்... தலா ஒரு வீடு 4.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 17 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்துவருகின்றன.

குடியிருப்புகள்
குடியிருப்புகள்

கூடுதல் செலவுக்கான நிதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 126 முகாம்களில் வசிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு 317 கோடி ரூபாய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். வேலூரில் இதேபோன்று இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், திண்டுக்கல்லில் சிறப்பு திட்டமாக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இந்த பணிகள் நடக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலங்கையிலிருந்து வரும் தமிழர்களை 'இங்கு வாருங்கள்' என நாங்கள் அழைக்கவில்லை. சூழ்நிலை காரணமாக அவர்கள் அங்கிருந்து வருகிறார்கள். அவர்களை தாயுள்ளத்தோடு பாதுகாப்பது, தங்க வைப்பது, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது என முயற்சியில் உள்ளோம். இலங்கையில் உள்ள மக்கள் பொருளாதார சிக்கலில் தவிக்கும் நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் 123 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரிசி, மருத்துவம் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளோம். மேலும் இரண்டாவது கட்டமாக தூத்துக்குடியிலிருந்து நிவாரண பொருள்கள் இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

ஆய்வு
ஆய்வு

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் அந்த மாணவர்கள் தகுந்த கல்வியை இங்கே பயில்வதற்கான ஒரு ஆய்வுக்குழு அமைத்து உள்ளோம். உக்ரைனில் படித்தவர்கள் எந்தெந்த வருடங்களில் படிப்பைத் தொடர முடியவில்லை என்பதை ஆய்வு செய்து கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் படிப்பை இங்கே தொடர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

வக்பு வாரியத்தில் இதுவரை 11 இடங்களில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிரச்னைக்குரிய இடத்தை சுமுகமாகப் பேசி முடித்துள்ளோம். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் தாமாக முன்வந்து இடத்தை ஒப்படைத்தனர். அதே போன்று தொடர்ந்து வக்பு வாரிய சொத்துகளை மீட்க முயற்சி நடந்து வருகிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism