Published:Updated:

``ஆளுநரை திமுக மிரட்டுகிறதா?" - சி.வி.சண்முகத்தின் பாய்ச்சலுக்குக் காட்டமாக பதிலளித்த மஸ்தான்!

சி.வி.சண்முகம் - செஞ்சி மஸ்தான்

"அமித் ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பேசினார்கள். இன்று, பொன்முடியின் மகன் தமிழ்நாட்டின் கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்." - சி.வி.சண்முகம்

``ஆளுநரை திமுக மிரட்டுகிறதா?" - சி.வி.சண்முகத்தின் பாய்ச்சலுக்குக் காட்டமாக பதிலளித்த மஸ்தான்!

"அமித் ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பேசினார்கள். இன்று, பொன்முடியின் மகன் தமிழ்நாட்டின் கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்." - சி.வி.சண்முகம்

Published:Updated:
சி.வி.சண்முகம் - செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதிக்குட்பட்ட புளிச்சப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் அ.தி.மு.க-வின் கொடியை ஏற்றிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், "மக்கள் பற்றிக் கொஞ்சம்கூட சிந்தனை இல்லாமல், கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் முதலமைச்சர்... தானும், தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்ற நிலையில் இருக்கிறார். அவர், எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு சொல், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு சொல் எனப் பேசுகிறார். அமித் ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பேசினார்கள். இன்று, பொன்முடியின் மகன் தமிழ்நாட்டின் கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதைக் கேட்டால்... 'அது வேற வாய், இது நாற வாய்' என்பார்கள். 

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இன்றைக்குத் தமிழக போலீஸ் கையாலாகாத போலீஸாக இருக்கிறது. கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தைப் பற்றி இன்று வரை வாய் திறந்து முதலமைச்சர் பேசவில்லை. தீவிரவாதத்தைக் கண்டிக்காத ஒரு முதலமைச்சர் இந்தியாவிலேயே உண்டு என்றால், அது ஸ்டாலின்தான். இதிலிருந்து தெரியவருவது என்ன... அந்த குண்டுவெடிப்பைச் சரி என்கிறார்களா... இல்லை பின்புலத்தில் யாராவது இருக்கிறார்களா\ என்ற சந்தேகம் எழும்புகிறது. 

சும்மா உட்கார்ந்து சாப்பிடுவதற்கு ஆளுநர் பதவி இல்லை. அரசின் செயற்பாடுகள் சரியாக இருக்கின்றனவா... இல்லையெனில், அதைச் சுட்டிக்காட்டும் கடமை ஆளுநருக்கு எப்போதும் உண்டு. அதைத்தான் ஆளுநர் செய்தார். ஆனால், உடனே ஆளுநரை மாற்றுங்கள் எனக் கூறி, ஆளுநரை அச்சுறுத்தி மிரட்டிப் பார்க்கிறது இந்த அரசு. தனது கையாலாகாததனத்தை காட்டிக்கொண்டிருக்கிறது. முதலமைச்சருக்கு மந்திரிகள் சேவகம் செய்கிறார்கள். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி-யெல்லாம் மந்திரிகள் வீட்டில் அடியாட்கள் வேலை பார்க்கிறார்கள்" என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

செஞ்சி மஸ்தான் பேட்டி
செஞ்சி மஸ்தான் பேட்டி

இந்த நிலையில், நேற்றைய தினம் மரக்காணம் பூமீஸ்வரர் கோயிலில் மழைநீர் தேங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்ட சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'ஆளுநரை தி.மு.க மிரட்டுவதாக சி.வி.சண்முகம் கூறியிருக்கிறாரே' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "அவருடைய பழைய செய்திகளை எடுத்துப் பாருங்கள். அவர் யாரை மிரட்டியிருக்கிறார், யாரிடம் மிரண்டுபோயிருக்கிறார் என்று தெரியும். அந்தப் பழைய செய்தியை எடுத்துப்போடுங்களேன்" என்றார்.