Published:Updated:

`அவர் பிரபலமடைய என்னை விமர்சிக்கிறார்!'-தமிழச்சி தங்கபாண்டியனைச் சாடும் ஜெயக்குமார்

கலிலுல்லா.ச

`தி.மு.க திமிங்கிலம் என்றால் அ.தி.மு.க, மாட்டாத விலாங்கு மீன்; ஸ்டாலின் நினைத்தது நடக்காது.’

jayakumar
jayakumar

தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள்துறை சார்பில் சென்னை பாரிமுனையில் உள்ள குறளக வளாகத்தில், கொலுபொம்மைக் கண்காட்சி மற்றும் கதர் பொருள்கள் விற்பனையை, அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாஸ்கரன் தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியின்போது, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

minister
minister
`எதற்காக வெளிநாடு செல்கிறார் ஸ்டாலின்?’- ஜெயக்குமார் சொல்லும் ரகசியம்

அப்போது பேசிய அவர், `` கதர் மற்றும் கிராமத் தொழில்கள் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தொழில், கிராமப் புறங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் பெரும் பங்குவகிக்கிறது. மக்களும் இவற்றைப் பயன்படுத்தி, கிராமத் தொழில்களை மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வேண்டுமானால் தி.மு.க-வுக்கு சிலர் செல்லலாம். ஆனால், அ.தி.மு.க-விலிருந்து ஒதுபோதும் யாரும் தி.மு.க-வுக்கு செல்ல மாட்டார்கள்.

பதவி கொடுப்பதாகச் சொன்னால், அ.ம.மு.க-விலிருந்து பலரும் தி.மு.க-வுக்கு ஓடிவருவார்கள் என ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், அப்படியெல்லாம் யாரும் தி.மு.க-வுக்கு ஓடிவர மாட்டார்கள். தி.மு.க திமிங்கிலம் என்றால் அ.தி.மு.க, மாட்டாத விலாங்கு மீன்; அ.தி.மு.க-வை ஸ்டாலின் சுவாகா போட பார்க்கிறார். அது நடக்காது. சினிமா டிக்கெட்டுகள் விற்பனையில் தனியார் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.

jayakumar press meet
jayakumar press meet

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில், உற்பத்தியும் நுகர்வோரும் சரிசமமாக இருப்பதால், பாதிப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை. நாங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணிதான் அமைத்துள்ளோம்; ஒன்றாக இணைந்து செயல்படவில்லை” என்றார். `ஸ்டாலினை விமர்சித்து ஜெயக்குமார் பிரபலமாகப் பார்க்கிறார்’ என்று தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, `ஸ்டாலின் தான் என்னை விமர்சித்து பெயர் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார். நான் அவரை விமர்சித்து பெயர்வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதுமட்டுமில்லாமல், தமிழச்சி தங்கபாண்டியன், புதிதாக முளைத்த மழைக்காளான். அவர் பிரபலமடைய என்னை விமர்சனம் செய்கிறார்” என்று அவர் குற்றம் சாட்டினார்.