‘‘முப்பது வருடங்களாக டிக்கெட் கட்டணம் வரைமுறை செய்யாமல் இருந்தது. அதையடுத்து, அரசு ஒரு குழு அமைத்து, கட்டணத்தைச் சீரமைத்தது. மல்டி ஃப்ளெக்ஸ், ஏ.சி, சாதாரண திரையரங்கம்... ஒவ்வொன்றுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மூடப்படவிருந்த பல திரையரங்குகளை அரசு காப்பாற்றியுள்ளது. தற்போது `சினிமா டிக்கெட், ஆன்லைன் மூலமாகவே விற்க முடியும்’ என்று அரசு அறிவித்திருக்கிறது. தியேட்டர் டிக்கெட் கவுன்டர்களில் கேட்டாலும், ஆன்லைன் மூலம்தான் டிக்கெட் பதிவுசெய்ய முடியும். இதனால், அதிக விலைக்கு டிக்கெட்டை இனி விற்க முடியாது. படத்தின் வசூலைச் சரியாகக் கணக்கிட முடியும். நடிகர்களின் சம்பளத்தை, தயாரிப்பாளர்கள் வரையறை செய்வார்கள். வரி ஏய்ப்புக் குறையும்’’ - படபடவென... அதேசமயம் ஆணித்தரமாகப் பேசுகிறார் செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

‘‘அரசு அறிவிக்கும் இந்தத் திட்டங்களுக்கு வரவேற்பு இருக்குமா?’’

‘‘நிச்சயமாக. எங்கே குறைவான கட்டணத்தில் சேவை வழங்கப்படுகிறதோ, அதை மக்கள் வரவேற்பார்கள். தற்போது ஒரு நபர் நான்கு டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்தால், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தனித்தனியாக சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசின் இந்தத் திட்டத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கைவரை எத்தனை டிக்கெட் எடுத்தாலும், அதற்கு ஒரே கட்டணம்தான் வசூலிக்கப்படும். விரைவில், ஆன்லைனில் டிக்கெட் விற்கும் நிறுவனங்களை அழைத்துப் பேசவிருக்கிறோம். சுமுகமான தீர்வு கிடைக்கும் என நினைக்கிறோம். இல்லையெனில், அரசு கேபிள் டி.வி போல் அரசின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை இணையதளம் விரைவில் வரும். எங்களின் முடிவை திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும், திரையரங்க உரிமையாளர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.”

‘‘ஆனால், சில மாதங்களுக்கு முன்புகூட பார்க்கிங் கட்டணத்தை வரையறுத்தீர்கள். ஆனால், அதையெல்லாம் திரையரங்கம் பின்பற்றுவதில்லையே?”

‘‘மல்டி ஃப்ளெக்ஸ் முதல் ஊரகப் பகுதி திரையரங்கம் வரை பார்க்கிங் கட்டணத்தை வரையறை செய்துள்ளோம். அந்தக் கட்டண விவரங்களை பார்க்கிங் இடத்தில் ஒட்ட வேண்டும் என, திரையரங்க உரிமையாளர்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம். அதிக கட்டணம் வசூலித்தால், பொதுமக்களே புகார்செய்யலாம். அதேபோல், திரையரங்கங்களில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலையை நிர்ணயிப்பது குறித்தும் திரையரங்க உரிமையாளர்களிடம் பேசியிருக்கிறோம். விரைவில் இவையெல்லாம் முறைப்படுத்தப்படும்.’’

‘‘பல திரையரங்கங்களில் வெளியிலிருந்து தண்ணீர் பாட்டில்கூட எடுத்துச் செல்ல முடியாத நிலைதானே உள்ளது?’’

‘‘ஒரு சில தி்ரையரங்குகளில்தான் இப்படி நடக்கிறது. திரையரங்க உரிமையாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இதுகுறித்தும் பேசியிருக்கிறோம். விரைவில் நிலை மாறும்.’’

‘‘திரைத் துறையுடன் இந்த அரசு இணக்கமாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறதே?’’

‘‘இல்லவே இல்லை. புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் திரைத் துறையிலிருந்து வந்தவர்கள். அதனால், இந்த அரசு எப்போதும் திரைத் துறைக்கு இணக்கமாகவே இருக்கும். திரையரங்க உரிமையாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. இருதரப்பையும் அழைத்துப் பேசி பிரச்னையைச் சரிசெய்தோம். க்யூப் நிறுவனம், கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக, தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் எங்களிடம் சொன்னார்கள். க்யூப் நிறுவனத்திடம் பேசி தீர்வுகண்டோம்.’’

‘‘நடிகர்களின் படங்கள் வெளியாவதில் அரசின் தலையீடு இருக்கிறதே?’’

‘‘நாங்கள் நடிகர்களுக்கு உதவிதான் செய்தோம். விஜய்யின் ‘மெர்சல்’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, அதை உடனடியாகத் தீர்த்துவைத்து, படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய உதவியது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். இது விஜய்க்கும் தெரியும்; அட்லிக்கும் தெரியும். சமீபத்தில் ‘கோமாளி’ படத்தின் பிரச்னையையும் நாங்கள் தலையிட்டுத் தீர்த்துவைத்தோம்.’’

‘‘ஆனால், நடிகர் விஜய்யின் ‘சர்கார்’ படத்துக்குப் பிரச்னை செய்ததே நீங்கள்தானே?’’

‘‘நான் அமைச்சர்தான். ஆனால், அடிப்படையில் அ.தி.மு.க-காரன். எங்கள் தலைமையைப் புண்படுத்தும் விதத்தில் சில காட்சிகள் ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றிருந்தன. உணர்வுள்ள தொண்டன் என்ற முறையில், அந்தப் படத்துக்கு எதிராகப் போராடினோம். அதேநேரம், திரையரங்க உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதற் காக, திரையிடலுக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. அதை யடுத்து சில காட்சிகளைப் படக்குழு நீக்கியது.’’

‘‘அரசு கேபிளில் சில சேனல்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம். அரசு தடைசெய்ய வேண்டும் என நினைத்தால், முழுவதுமாகத் தடைசெய்ய முடியும். ஆனால், ஒருபோதும் அதைச் செய்ய மாட்டோம்.”