Published:Updated:

அமைச்சர் கூட்டத்தை புறக்கணித்த திமுக-வினர்? - சேர் கிடைக்காமல் கொதித்த பாமக எம்எல்ஏ- சேலம் சலசலப்பு

எம்.எல்.ஏ சதாசிவம்

அமைச்சர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களோ, எம்.எல்.ஏ-க்களோ, எம்.பி-க்களோ அழைப்புவிடுத்தும் நிகழ்ச்சியில் பங்குப்பெறவில்லை என்பது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் கூட்டத்தை புறக்கணித்த திமுக-வினர்? - சேர் கிடைக்காமல் கொதித்த பாமக எம்எல்ஏ- சேலம் சலசலப்பு

அமைச்சர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களோ, எம்.எல்.ஏ-க்களோ, எம்.பி-க்களோ அழைப்புவிடுத்தும் நிகழ்ச்சியில் பங்குப்பெறவில்லை என்பது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Published:Updated:
எம்.எல்.ஏ சதாசிவம்

சேலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைசார்ந்த செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில், தாட்கோ அதிகாரிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்குபெற்றனர். ஆனால், அமைச்சர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களோ, எம்.எல்.ஏ-க்களோ, எம்.பி-க்களோ அழைப்புவிடுத்தும் நிகழ்ச்சியில் பங்குப்பெறவில்லை என்பது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுத்ததின்பேரில் மேட்டூர் பா.ம.க எம்.எல்.ஏ சதாசிவம் வந்தார். அப்போது அவருக்கு நாற்காலி இல்லாததால் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்.

அமைச்சர் கூட்டத்தை புறக்கணித்த திமுக-வினர்? - சேர் கிடைக்காமல் கொதித்த பாமக எம்எல்ஏ- சேலம் சலசலப்பு

அதன்பின்னர் எம்.எல்.ஏ-வை கவனித்த அதிகாரிகள் வி.ஐ.பி நாற்காலி போடாமல் சாதாரண நாற்காலி போட்டதும், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ, நிகழ்ச்சியை புறக்கணிக்கும் விதமாக அரங்கைவிட்டு வெளியேறினார். உடனே மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா எம்.எல்.ஏ சதாசிவத்தை சமாதானாப்படுத்தி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். அதன்பின் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், “தமிழகத்தில் 1,400-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் இருக்கின்றன. சமீபகாலத்தில் குறைந்து வந்த மாணவர்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளை செய்து வருகிறோம். அரசு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். என்று கூறினார். தாட்கோ மூலமாக பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கும், தொழிற்பயற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தாட்கோ மூலமாக தனியாக இணையசேவை உருவாக்கி அவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம், “மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலமலை, குளத்தூர், பெரியகுளம் போன்ற கிராமங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படவில்லை.

அமைச்சர் கூட்டத்தை புறக்கணித்த திமுக-வினர்? - சேர் கிடைக்காமல் கொதித்த பாமக எம்எல்ஏ- சேலம் சலசலப்பு

பள்ளிக்கட்டடங்கள், விடுதிகள், அனைத்தும் தரமற்ற நிலையில்தான் இன்றளவும் இருக்கின்றன. குளத்தூர் ஒன்றியத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கக்கூடிய சுமார் 150 -வீடுகள் இருக்கின்றன. அவை அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன.

மேலும், காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதில். இந்தச் சட்டத்தைப் பலர் தவறுதலாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சமூக பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருக்கிறது. எனவே போலீஸார் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஏற்காடு மலைப்பகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான சித்ராவும் கலந்துகொள்ளவில்லையாம். அதற்குக் காரணம், ``அதிகாரிகள் அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் யாருக்கும் அழைப்பு கொடுக்காமல் தவிர்த்துவிட்டனர்" என்கிறார்கள். இது குறித்து எம்.எல்.ஏ சித்ராவிடம் பேசியபோது, “பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தொகுதி ஏற்காடு. ஆனால் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பாக எனக்கு எந்தவித அறிவிப்பும் வழங்காமல் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இது உண்மையாகவே மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் நடந்த கூட்டமாக இருந்தால் எனக்கு தகவல் அளித்திருப்பார்கள். ஆனால் கூட்டம் அப்படி நடைபெறவில்லை” என்றார்.