Published:Updated:

``முதியோர் பென்ஷன் மீண்டும் கள-ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும்!" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

வளைகாப்பு

அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

``முதியோர் பென்ஷன் மீண்டும் கள-ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும்!" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Published:Updated:
வளைகாப்பு

அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் மண்டபத்தில் சமூக நலன்-மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணிகளுக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஊட்டச்சத்து பொருள்களையும், வளைகாப்பு பொருள்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை சார்பில் 141 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மின்னணு குடும்ப அட்டை, ஆதரவற்ற விதவை சான்று, சாலை விபத்து, நிவாரண உதவித் தொகை என ரூ.20,29,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

நிகழ்ச்சி
நிகழ்ச்சி

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ``வீட்டில் வளைகாப்பு நடத்த முடியாதவர்களுக்கு சகோதரனாக இருந்து முதல்வர் வளைகாப்பு நடத்துகிறார். இன்று பிரச்னையில்லாத வீடுகளே இல்லை. இருந்தாலும், பிரச்சைனையை தள்ளிவிட்டு பிரசவகாலத்தில் நல்ல மனநலத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கவலை வேண்டாம். பெண்கள்தான் அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்கிறார்கள். எந்தக் குழந்தையாக இருந்தாலும் அது நம்முடைய குழந்தை. தொகுதி மக்கள் அனைவரும் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு எனக்கு வாக்களித்திருக்கிறீர்கள்.

ஓய்வூதியம்
ஓய்வூதியம்

இதுவரை 4 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு பென்ஷன் வழங்கியுள்ளோம். ஆனால் முதியோர் பென்ஷன் வாங்குபவர்களை பட்டியலிலிருந்து நீக்கி இருக்கிறோம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு திட்டத்துக்கு தகுதியில்லாதவர்களை நீக்கம் செய்வது அனைத்து ஆட்சியிலும் நடக்கும் வழக்கமான நடைமுறைதான். இருப்பினும், தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்கள் குறித்து மீண்டும் களஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில், தகுதிப்பெறும் அனைவருக்கும் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும். எல்லோருக்கும் எல்லாம் வழங்கக்கூடிய ஆட்சிதான் தி.மு.க ஆட்சி" என்றார்.