Published:Updated:

`ரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்திவைக்க முதல்வர் சொல்லிட்டாரு...' - கே.என்.நேரு

கே.என்.நேரு

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்திவைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

`ரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்திவைக்க முதல்வர் சொல்லிட்டாரு...' - கே.என்.நேரு

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்திவைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கே.என்.நேரு

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலப் பணிக்கு நிலம் கிடைக்காததால், கடந்த எட்டு ஆண்டுக்காலமாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் மத்திய பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான 66 சென்ட் நிலம் பெறப்பட்டு, எட்டு ஆண்டுகளாக நிறைவடையாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் சிவராசு, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் நாராயணசாமி ஆகியோர் இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "எங்களுடைய முயற்சியால் பத்தாண்டுகளாக முடிவு பெறாமல் இருந்த அரிஸ்டோ மேம்பாலப் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. இன்னும் மூன்று மாதங்களில் இந்தப் பணிகள் அனைத்தும் முடிவு பெறும். எடப்பாடி பழனிசாமிக்கு பேசுவதுக்கு வேற எந்தச் சமாசாரமும் இல்லை. அதனால பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம் உயரப்போகுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. பேருந்துக் கட்டணம் உயர்வு குறித்து தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் முடிவு செஞ்சு சொல்லுவாங்க. எந்தக் கட்டணம் உயரப்போகிறது என்று எனக்குத் தெரியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னையில் சொத்து வரி உயர்த்தி 22 வருஷம் ஆச்சு. மற்ற ஊர்களில் 13-14 வருஷம் ஆச்சு. இதனால உள்ளாட்சி நிர்வாகமே சுத்தமே அடிபட்டுப்போச்சு. பல பேர் வரியே கட்ட மாட்டேங்குறாங்க. நான்கு மாடி கட்டிட்டு ரெண்டு மாடிக்கு வரி கட்டுறாங்க. நகராட்சி சொந்த வருவாயைப் பெருக்கி, மக்களுக்கு வசதி செய்யத்தான் நினைக்கிறோம். அதுக்காகத்தான் ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு செய்யப்படவிருக்கு. மத்தபடி மக்கள் பணத்தை அரசு எடுத்துச் செல்லுவதற்காக எல்லாம் இல்லை.

திருச்சி விமான நிலையம் நாட்டிலேயே சிறந்த சிறு விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருக்கிறது. எனவே, தனியார் நிறுவனம் இந்த விமான நிலையத்தை வாங்கிவிட்டது. திருச்சி விமான விரிவாக்கத்துக்காக, எங்களிடம் இருக்கும் இடத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

அதையடுத்து, 'திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயரை வைத்தால் நாங்கள் கலெக்டரை இயங்கவிட மாட்டோம்’ என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே...' எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப அதற்கு பதிலளித்த கே.என்.நேரு, "ஏன் என்ன... கையைக் காலைக் கட்டிடுவாங்களா... முதல்வர் கூப்பிட்டு கலைஞர் பெயர் வைக்கும் அந்தத் தீர்மானத்தை நிறுத்திவைக்கச் சொல்லிட்டாரு.

இன்னும் அந்தத் தெரு பழைய பேர்லதான் இருக்கு. வேற எந்தச் சமாசாரமும் கிடைக்கலைன்னு அண்ணாமலை தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்காரு. எந்தத் தனிநபரும் அரசாங்கத்தோட செயல்பாட்டை நிறுத்திவைக்க முடியுமா... அரசுப் பணியை, அரசு அலுவலர்கள் பணியை அப்படித் தடுத்தால் அதற்குரிய வழக்குகளை அவர்கள் சந்திக்க நேரிடும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism