Published:Updated:

``யாரெல்லாம் ஜெயிலுக்குப் போயிருக்கீங்க... நான் அப்பப்போ போயிருக்கேன்"- சேலத்தில் கே.என்.நேரு `கலகல’

கே.என்.நேரு

`ஜவ்வரிசி பயன்பாடு என்பது தமிழகத்தில் மிகவும் குறைவுதான். ஆனால் உற்பத்தி என்பது அதிகமாக இருந்துவருகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி பெரும்பாலும் வட மாநிலங்களில்தான் விற்பனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.' - விவசாய சங்கத் தலைவர்

``யாரெல்லாம் ஜெயிலுக்குப் போயிருக்கீங்க... நான் அப்பப்போ போயிருக்கேன்"- சேலத்தில் கே.என்.நேரு `கலகல’

`ஜவ்வரிசி பயன்பாடு என்பது தமிழகத்தில் மிகவும் குறைவுதான். ஆனால் உற்பத்தி என்பது அதிகமாக இருந்துவருகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி பெரும்பாலும் வட மாநிலங்களில்தான் விற்பனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.' - விவசாய சங்கத் தலைவர்

Published:Updated:
கே.என்.நேரு

சேலம் மாவட்ட ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்புக்குழுக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், ``ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் கலப்படம் செய்வது அனைத்தும் எங்களுக்குத் தெரியும். இனிமேல் பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்கும்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

வட மாநிலங்களில் ஜவ்வரிசியைத்தான் உணவாக உட்கொள்கிறார்கள். எனவே, சாப்பிடும் பொருளில் நச்சு கலப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என எச்சரிக்கையோடு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய சேலத்தைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் ஒருவர், ``ஜவ்வரிசி பயன்பாடு என்பது தமிழகத்தில் மிகவும் குறைவுதான். ஆனால் உற்பத்தி என்பது அதிகமாக இருந்துவருகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி பெரும்பாலும் வட மாநிலங்களில்தான் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பொருளாதார நிலை சரிவை நோக்கிச் செல்கிறது.

எனவே, தமிழ்நாட்டிலும் ஜவ்வரிசி பயன்பாடு அதிகரிக்க வேண்டும். தமிழக மக்களும் ஜவ்வரிசி பயன்படுத்தும்விதமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஜவ்வரிசியை ஒரு வேளை உணவாக அளிக்கலாம் அல்லது தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு ஜவ்வரிசி உணவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ``யாரெல்லாம் ஜெயிலுக்குப் போறீங்களோ அவங்களுக்குத்தான் ஜவ்வரிசி சாப்பாடு கிடைக்கும். நானும் ஜெயிலுக்கு அப்பப்போ போயிருக்கேன்" என்றவுடன், அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

பின்னர், ஜவ்வரிசிக்கு விதிக்கப்படும் வரி குறித்து உற்பத்தியாளர் ஒருவர் பேசியபோது, ``விற்பனைக்கு ஏற்றவாறு நிரந்தர வரி விதிக்க வேண்டும்" என்று கூறினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ``வரியே வேண்டாம் என்று வீரபாண்டியார் அன்னைக்குச் சொன்னாரு. இன்னைக்கு நீங்க வரி வேண்டும் என்று சொல்றீங்க" என்றார். அரங்கத்தில் உள்ளோர் வீரபாண்டி ஆறுமுகம் என்றுதான் அமைச்சர் சொல்லியிருப்பாரோ என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர். அதன்பின்னர், ``வீரபாண்டியார் அன்றே ஆங்கிலேயரிடம் வரி கொடுக்க முடியாது என்று சொன்னாரே, அதைத்தான் சொன்னேன்" என்று கூறிய பிறகுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று தெரியவந்தது.