Published:Updated:

``சொத்துவரி உயர்த்தப்பட்டும் தமிழகத்தில்தான் மிகக்குறைவு!" - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

கே.என்.நேரு

தமிழக அரசு 150 சதவிகிதம் வரை சொத்துவரி உயர்த்தியதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் அரசுப் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

``சொத்துவரி உயர்த்தப்பட்டும் தமிழகத்தில்தான் மிகக்குறைவு!" - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

தமிழக அரசு 150 சதவிகிதம் வரை சொத்துவரி உயர்த்தியதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் அரசுப் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

Published:Updated:
கே.என்.நேரு

வட இந்தியாவில் பஞ்சாப், உ.பி உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் முடிந்தவுடன், மத்திய அரசு கேஸ் சிலிண்டர் விலையையும், சுங்கக் கட்டணத்தையும் உயர்த்தியது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்த்தப்பட்டுவருகிறது. அதேபோல், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தவுடன், தமிழகத்திலும் சில விலை உயர்வுகளைச் செய்திருக்கிறது தி.மு.க அரசு. அதாவது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியப் பகுதிகளில் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை சொத்துவரியை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.

சொத்துவரி உயர்வு
சொத்துவரி உயர்வு

சொத்துவரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தமிழகம் தழுவிய வகையில் மார்ச் 5-ம் தேதி போராட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியும் தலைமைத் தாங்கினர். கொளுத்தும் வெயிலிலும் தமிழக அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் போராட்டம்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் போராட்டம்

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி என தி.மு.க-வுடன் கூட்டணியிலிருக்கும் கட்சிகளும் தி.மு.க அரசுக்குத் தங்களது கண்டனங்களை அறிக்கைகள் மூலம் தெரிவித்தன. எனினும், எவ்வித எதிர்ப்புக்கும், கண்டனத்துக்கும் தி.மு.க மசிந்ததாகத் தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிர்க்கட்சிகள், கூட்டணிக்கட்சிகள், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சொத்துவரி உயர்வு திரும்பப் பெறப்படுமா? உயர்த்தப்பட்டதற்கு என்ன காரணம்? போன்ற கேள்விகளை தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவிடம் கேட்டோம். ``சென்னையில் 24 ஆண்டுகளாகவும், மற்ற இடங்களில் 18 ஆண்டுகளாகவும் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. தற்போது சொத்துவரி உயர்த்தப்பட்டதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசுதான்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

15-வது நிதிக்குழுவின் நிதி தமிழக உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசால் விடுவிக்கப்பட வேண்டும் என்றால், சொத்துவரி விகிதங்களில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற கண்டிஷன் போடப்பட்டது. இது தமிழகத்துக்கு மட்டுமின்றி, எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான உத்தரவுதான். கடந்தாண்டு உள்ளாட்சிக்கான 7,000 கோடி ரூபாய் கொடுக்கப்படவில்லை. பணவீக்கம் அதிகரித்துவிட்டதால், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது, அதனால் உள்ளாட்சிகளில் கீழ்நிலை வரை சென்று சேர வேண்டும் எனில் கண்டிப்பாக சொத்துவரி உயர்த்தப்பட வேண்டும் என கூறப்பட்டது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

600 சதுரடி வீட்டுக்கு தமிழகத்தில் 2,800 ரூபாய் வரி என்றால், அதுவே மராட்டிய மாநிலத்தில் 84,500 ரூபாய், ஆந்திராவில் 20,000 ரூபாய். சொத்துவரி உயர்த்தப்பட்டும் தமிழகத்தில்தான் மிகக்குறைவு. அ.தி.மு.க ஆட்சியில் ஏழை, பணக்காரர் பாகுபாடு இல்லாமல் 300 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆனால், தி.மு.க அரசு பொருளாதார விவகாரங்களைக் கணக்கிட்டுதான் உயர்த்தியிருக்கிறது. 1,800 சதுரடி சொத்து கொண்டவர்களுக்கு 50 சதவிகித உயர்வுதான் அமலாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75 சதவிகித மக்கள் இந்த கேட்டகரிக்குள் வந்துவிடுகிறார்கள். 1,800 சதுரடிக்கும் மேலாக சொத்து கொண்டவர்களுக்குத்தான் 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்கள் மக்கள் தொகையில் 25 சதவிகிதம் பேர்தான் என்பதால் பெரும்பான்மையினருக்குப் பாதிப்பு இல்லை. 15-வது நிதிக்குழுவைக் காரணம் காட்டி, மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தினால்தான் தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டது!” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism